முல்லைத்தீவு மாவட்ட விலை நிர்ணய குழு கூட்டம்!
முல்லைத்தீவு மாவட்டத்தின் 2025 ஆம் ஆண்டுக்கான மாவட்ட விலை நிர்ணயக்குழுக் கூட்டம் மாவட்ட அரசாங்க அதிபர் அ.உமாமகேஸ்வரன் தலைமையில் நடைபெற்றது.
இந்த கூட்டம் நேற்று (04) பிற்பகல் மாவட்ட செயலக பண்டாரவன்னியன் மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
விலைப்பட்டியல்கள்
குறித்த கூட்டத்தில் பொருட்கள் மற்றும் சேவைகளின் விலைப்பட்டியல்கள் தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டது.
மேலும் இந்த கலந்துரையாடலில் தொழிலாளர் கூலி மற்றும் வாகன வாடகை, கட்டட மூலப்பொருட்கள் தொடர்பான விலை நிர்ணயம் தொடர்பில் தீர்மானங்கள் எடுக்கப்பட்டன.
இந்தக் கலந்துரையாடலில் மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.குணபாலன், மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர், மாவட்ட செயலக பிரதம கணக்காளர், பிரதேச செயலாளர்கள், உதவி பிரதேச செயலாளர்கள், உதவித் திட்டமிடல் பணிப்பாளர்கள், துறைசார்ந்த திணைக்களங்களின் உத்தியோகத்தர்கள், தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள், பதிவு செய்யப்பட்ட ஒப்பந்த காரர்கள் மற்றும் அவர்களின் பிரதிநிதிகள் என பலதரப்பட்டோர் கலந்து கொண்டனர்.












பார்க்கிங் படத்திற்கு 3 தேசிய விருதுகள், ஜீ.வி.பிரகாஷ் சிறந்த இசையமைப்பாளர்.. விருது வென்றவர்கள் லிஸ்ட் Cineulagam
