முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்திக்குழுக் கூட்டம்
முல்லைத்தீவு(Mullaitivu) மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டமானது மாவட்ட அபிவிருத்தி குழு தலைவரும் இராஜாங்க அமைச்சருமான காதர் மஸ்தான் அவர்களின் தலைமையில் நடைபெற்றுள்ளது.
குறித்த கூட்டமானது நேற்று(13.06.2024) மாவட்ட செயலக பண்டாரவன்னியன் மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றுள்ளது.
எடுக்கப்பட்ட தீர்மானங்கள்
முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் அ.உமாமகேஸ்வரன் அவர்களின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் முல்லைத்தீவு மாவட்டத்தின் முக்கிய விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டன.
மேலும், மாவட்டத்தில் காணப்படும் விவசாயம் ,காணி, மகாவலி அதிகாரசபை, வனவளத் திணைக்களம் , நன்னீர் மீன்பிடி , கடற்தொழில் மற்றும் கடற்தொழிலாளர்கள் தொடர்பான பிரச்சினைகள் முதன்மையாக கலந்துரையாடப்பட்டு சில தீர்மானங்கள் எடுக்கப்பட்டன.
இந் நிகழ்வில் வடக்குமாகாண பிரதம செயலாளர் இளங்கோவன், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான சாள்ஸ் நிர்மலநாதன், செல்வம் அடைக்கலநாதன், வினோநோகராதலிங்கம், முல்லைத்தீவு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சி.குணபாலன், வடமாகாண திணைக்களங்களின் செயலாளர்கள் மற்றும் பணிப்பாளர்கள், ஏனைய திணைக்களங்களின் அதிகாரிகள் , பிரதேச செயலாளர்கள், உதவிப் பிரதேச செயலாளர்கள், பொலிஸ் உயரதிகாரிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |





புலம் பெயர் தமிழர்களால் சிறீலங்காவை இலங்கையாக மாற்றிக்கொள்ள முடியுமா..! 21 மணி நேரம் முன்

மனைவியும் மாமியாரும் தினமும் துஷ்பிரயோகம் செய்வதாக அதிர்ச்சி புகார்! ரகசிய கமெரா மூலம் அம்பலமான கொடுமை News Lankasri

Super Singer: சூப்பர் சிங்கரில் நடுவர் கொடுத்த இன்ப அதிர்ச்சி... யாருக்கெல்லாம் வாய்ப்பு கிடைத்தது? Manithan

சூப்பர் சிங்கரில் ஏ.ஆர்.ரகுமான் ஹிட்ஸ் ரவுண்டில் சில போட்டியாளர்களுக்கு சர்ப்ரைஸ்.. என்ன தெரியுமா? Cineulagam

நிறைய பேரிடம் கடன் வாங்கி இருக்கிறார், அண்ணனுக்கு உதவ முடியாது.. திட்டவட்டமாக தெரிவித்த நடிகர் பிரபு Cineulagam
