மாந்தை கிழக்கில் நடைபெற்ற முல்லைத்தீவு மாவட்ட பண்பாட்டுப் பெருவிழா
முல்லைத்தீவு மாவட்ட பண்பாட்டுப் பெருவிழா மாந்தை கிழக்கு பிரதேச செயலாளர் பிரிவில் நேற்றையதினம் (24.10.2025) மாவட்ட அரசாங்க அதிபர் அ.உமாமகேஸ்வரன் தலைமையில் மிகச் சிறப்பான முறையில் நடைபெற்றுள்ளது.
பாரம்பரிய பண்பாட்டினை பேணும் நோக்கிலும் எதிர்கால தலைமுறையினருக்கு கலை கலாசார மரபுகளை எடுத்துச் செல்லும் நோக்கிலும் குறித்த கலாசார விழா நிகழ்வுகள் ஒவ்வொரு பிரதேச செயலகத்தில் நடைபெற்றதுடன் இறுதியாக மாவட்ட கலாசார விழா அனைத்துப் பிரதேச செயலகங்களையும் உள்ளடக்கி நேற்றையதினம் இடம்பெற்றுள்ளது.
விழாவிற்கு பிரதம அதிதியாக முன்னாள் வடக்கு மாகாண பிரதம செயலாளர் இ.இளங்கோவன் கலந்து சிறப்பித்துள்ளார்.
விருதுகள்
விழாவின் ஆரம்ப நிகழ்வில் கலை கலாசார பண்பாடுகளைத் தாங்கிய ஆற்றுகைகளுடன் விருந்தினர்கள் மாந்தை கிழக்கு நிகழ்வு மண்டபத்திற்கு அழைத்துவரப்பட்டுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து, கலை நிகழ்வுகள் இடம்பெற்றதுடன் முது கலைஞர்களுக்கு "முல்லை கலைக்கோ" விருதுகளும் இளங்கலைஞர்களுக்கு "இளஞ்சுடர்" விருதுகளும் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளன.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |










2011ஆம் ஆண்டு தீபாவளிக்கு வெளிவந்த வேலாயுதம், 7ஆம் அறிவு.. பாக்ஸ் ஆபிஸ் வசூல் எவ்வளவு தெரியுமா Cineulagam
இந்தியாவுக்கு எதிராக புலம்பெயர் டாக்சி ஓட்டுநரின் மகன்: அவுஸ்திரேலிய அணியில் இந்திய வம்சாவளி பவுலர் News Lankasri
கணவரை பிரிந்த நிலையில் ஹன்சிகா எங்கே சென்றிருக்கிறார் பாருங்க.. அதுவும் யாருடன் தெரியுமா? Cineulagam