முல்லைத்தீவு மாவட்டத்தில் ஒரு மாதத்தில் 25 பேர் கோவிட் தொற்றால் உயிரிழப்பு
வடக்கில் முல்லைத்தீவு மாவட்டத்தில் கோவிட் தொற்றினால் உயிரிழப்போரின் எண்ணிக்கை தொடர்ச்சியாக அதிகரித்து வருகின்றது.
கடந்த ஆகஸ்ட் மாதம் மட்டும் 25 பேர் கோவிட் தொற்றினால் உயிரிழந்துள்ளதாக மாவட்ட மருத்துவமனை தகவல்கள் தெரிவிக்கின்றன.
மாவட்ட மருத்துவமனையில் உடலங்கள் தேங்கப்படவில்லை என்றும், அனைத்து உடலங்களும் கட்டம் கட்டமாக வவுனியா, பொலனறுவை போன்ற இடங்களுக்கு அனுப்பப்பட்டு எரியூட்டப்பட்டுள்ளதுடன், இன்னும் நான்கு உடலங்கள் பி.சி.ஆர்.பரிசோதனை முடிவிற்காகக் காத்திருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
எனவே மக்கள் விழிப்பாகவும்,அவதானத்துடனும் செயற்படுமாறும் நோய்த்தொற்று அறிகுறிகள் ஏதும் இருப்பின் உடனடியாக மருத்துவமனையினை நாடி இறுக்கமான நடைமுறைகளை கடைப்பிடிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பூஜையில் வெளிவந்த பயங்கரமான விஷயம், ஷாக்கான குடும்பத்தினர்... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் Cineulagam
மருத்துவமனை மீது பாகிஸ்தான் நடத்திய மிக மோசமான குண்டு வீச்சு... 400 கடந்த பலி எண்ணிக்கை News Lankasri
18 நாள் முடிவில் ராதிகாவின் தாய் கிழவி திரைப்படம் செய்துள்ள மாஸ் கலெக்ஷன்... எவ்வளவு தெரியுமா? Cineulagam