மாவீரர் நாள் நினைவுகூரல்: முல்லைத்தீவில் மீண்டும் நீதிமன்றத்தை நாடியுள்ள பொலிஸார்
மாவீரர் நாள் நினைவுகூரல் தொடர்பில் முல்லைத்தீவு மாவட்ட பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள் இன்று மீண்டும் முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றத்தை நாடியுள்ளனர்.
அதன்படி முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றம் மாவீரர் தின நினைவுகூரல் தொடர்பில் நேற்று வழங்கிய உத்தரவினை மீள் திருத்தம் செய்து, குறித்த நினைவுகூரலுக்கு தடை உத்தரவு வழங்குமாறு கோரப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
“இறந்தவர்களை நினைவுகூர்வது மானிடப் பண்பு” தடை செய்யப்பட்ட அமைப்பின் உறுப்பினராயினும், அவ் அமைப்பின் கொடிகள், அடையாளங்களைப் பிரதிநிதித்துவம் செய்யாது இறந்தவர்களை நினைவு கூர முடியும் என முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றம் நேற்றைய தினம் உத்தரவிட்டிருந்தது.
முல்லைத்தீவு மாவட்டத்தில் வழங்கப்பட்ட மாவீரர் நாள் தடை உத்தரவுகளை நீக்கக்கோரி நீதிமன்றில் நகர்த்தல் பத்திரம் ஊடாக விண்ணப்பிக்கப்பட்டு நேற்று இந்த கட்டளை வழங்கப்பட்டுள்ளது.
இந்த நிலையிலேயே மீண்டும் பொலிஸார் இது தொடர்பில் நீதிமன்றத்தை நாடியுள்ளதாக தெரியவருகிறது.
தொடர்புடைய செய்தி...
மாவீரர் நினைவு கூரல் தொடர்பில் முல்லைத்தீவு நீதிமன்றம் வழங்கியுள்ள அதிரடி உத்தரவு
சோமாலிலாந்தை இஸ்ரேல் அங்கீகரித்தது ஏன்? 4 நாட்கள் முன்
12ம் வகுப்பு தோல்வி... நிச்சயதார்த்தத்துடன் நின்று போன திருமணம்! பலரும் அறியாத பிக்பாஸ் திவ்யாவின் கதை Manithan
பரபரப்பான கதைக்களத்திற்கு நடுவில் சிறகடிக்க ஆசை சீரியல் ரசிகர்களுக்கு வந்த குட் நியூஸ்... என்ன தெரியுமா? Cineulagam
அவர் கிரீன்லாந்தைக் கைப்பற்றினால்... உலக முடிவுக்கு காரணமாகும்: ட்ரம்பிற்கு ரஷ்யா எச்சரிக்கை News Lankasri