ஈழத் தமிழர் உரிமைகள் பெருமன்றின் முல்லைத்தீவு மாவட்ட மாநாடு
ஈழத் தமிழர் உரிமைகள் பெருமன்றின் ஏற்பாட்டில், திருகோணமலைப் பிரகடனத்தை வலிதாக்கும் முல்லைத்தீவு மாவட்ட மாநாடு (28) இலங்கை செஞ்சிலுவைச்சங்க மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
இ.ஸ்ரீ ஞானேஸ்வரன் தலைமையில் நடைபெற்ற மாநாட்டில் ஈழத் தமிழர் உரிமைகள் பெருமன்றின் உருவாக்கம், நோக்கம் மற்றும் தேவை தொடர்பாக தெளிவுபடுத்தப்பட்டது.
இக்கலந்துலையாடலில் செயற்பாட்டாளர்களான கமலேந்திரன் மற்றும் வனிதா சேனாதிராஜா ஆகியோரால் தெளிவூட்டல் வழங்கப்பட்டது.
குறித்த மாநாட்டில் ஈழத்தமிழர்களின் தேசிய இனப்பிரச்சனைக்கு தீர்வுகாண்பதற்கு உள்ளக முறைகளை நிராகரித்தலும் வெளியக பொறிமுறைகளை உருவாக்குவதற்குமான மூலதத்துவங்கள் என உள்ளடங்களிய 'திருகோணமலைப் பிரகடனம்' மாநாட்டில் கலந்துகொண்ட அனைவரிடமும் கையளிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் ஈழத்தமிழர் உரிமைகள் பெருமன்றின் செயற்பாட்டாளர்கள் , பொது அமைப்புகளின் பிரதிநிதிகள், இளைஞர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.