முல்லைத்தீவு மத்திய பேருந்து நிலையத்தின் நிர்மாணப்பணிகள் தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள தீர்மானம்

Mullaitivu Government Of Sri Lanka
By Independent Writer Jun 03, 2026 04:11 PM GMT
Report
Courtesy: shanmugam thavseelan

நீண்டகாலமாக முழுமைப்படுத்தப்படாமல் காணப்படும் முல்லைத்தீவு மத்திய பேருந்து நிலையத்தின் கட்டுமானப்பணிகளை விரைவாக முழுமைப்படுத்தி, மக்கள் பாவனைக்காக கையளிக்குமாறு வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் வலியுறுத்தியுள்ளார்.

இந்நிலையில் குறித்த முல்லைத்தீவு மத்திய பேருந்து நிலையத்தின் கட்டுமானப்பணிகள் எதிர்வரும் ஒகஸ்ட் மாதம் 14ஆம் திகதியுடன் முழுமைப்படுத்தப்பட்டு மக்கள் பாவனைக்காக கையளிக்கப்படுமென முல்லைத்தீவு மாவட்ட செயலாளர் அ.உமாமகேஸ்வரன் பதிலளித்துள்ளார்.

முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம் 03.06 2026 இன்று இடம்பெற்றது. இக்கூட்டத்திலேயே இவ்விடயம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.

இவ்விடயம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் இதன்போது கருத்துத் தெரிவிக்கையில், முல்லைத்தீவு மத்திய பேருந்து நிலையத்தின் நிர்மாணப்பணிகள் நீண்டகாலமாக தொடர்கின்றன.

ஏறத்தாள ஏழு வருடங்களாக இந்த முல்லைத்தீவு மத்திய பேருந்து நிலையத்தின் நிர்மாணப்பணிகள் இடம்பெற்றுவருவதாகவும் அறிகின்றோம். எனினும் இதுவரை குறித்த பேருந்து நிலையத்தின் நிர்மாணப்பணிகள் முடிவுறுத்தப்படவில்லை.

உயிரை மாய்த்துக் கொள்ளும் மனநிலையில் சுரேஷ் சலே..! நீதிமன்றில் அம்பலமான தகவல்கள்

உயிரை மாய்த்துக் கொள்ளும் மனநிலையில் சுரேஷ் சலே..! நீதிமன்றில் அம்பலமான தகவல்கள்

திகதி அறிவிப்பு 

எனவே, முல்லைத்தீவு மத்திய பேருந்து நிலையத்தின் நிர்மாணப்பணிகளை விரைவாக முடிவுறுத்தி மக்கள் பாவனைக்காக கையளிக்கப்படவேண்டும். எப்போது இந்தப் பேருந்து நிலையத்தின் நிர்மாணப்பணிகள் முழுமையாக முடிவுறுத்தப்பட்டு, மக்கள் பாவனைக்கு கையளிக்கப்படும் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் கேள்வி எழுப்பினார்.

முல்லைத்தீவு மத்திய பேருந்து நிலையத்தின் நிர்மாணப்பணிகள் தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள தீர்மானம் | Mullaitivu Bus Stand Raviharan Mp Request

இந்நிலையில் முல்லைத்தீவு மாவட்ட செயலாளர் பதிலளிக்கையில், முல்லைத்தீவு மத்திய பேருந்து நிலையம் அமைப்பதற்குரிய திட்டமிடல்கள் கடந்த 2017,2018,2019ஆம் ஆண்டு காலப்பகுதிகளில் முன்னெடுக்கப்பட்டன.

அதனைத் தொடர்ந்து கடந்த 2020ஆம் ஆண்டு குறித்த மத்திய பேருந்து நிலையத்தை அமைப்பதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டிருந்தது. இருப்பினும் ஏற்பட்ட கொரோனா பெருந்தொற்று மற்றும் பொருளாதார நெருக்கடிகள் காரணமாக அந்த பேருந்து நிலையத்தை அமைக்கும் பணிகள் இடைநிறுத்தப்பட்டிருந்தன.

தற்போது முல்லைத்தீவு மத்திய பேருந்து நிலையத்தினை அமைப்பதற்குரிய நிதி ஒதுக்கிடுகள் செய்யப்பட்டு, கட்டுமானப்பணிகள் இடம்பெற்றுவருகின்றன.

அந்தவகையில், குறித்த பேருந்து நிலையத்தின் கட்டுமானப்பணிகள் எதிர்வரும் 14.08.2026ஆம் திகதியுடன் முழுமைப்படுத்தப்படுமென முல்லைத்தீவு மாவட்ட செயலாளர் இதன்போது பதிலளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

செம்மணி அகழ்வில் நெஞ்சை உலுக்கும் கொடூரம்.! ஒன்றன் மீது ஒன்றாக எலும்புக்கூடுகள் மீட்பு..

செம்மணி அகழ்வில் நெஞ்சை உலுக்கும் கொடூரம்.! ஒன்றன் மீது ஒன்றாக எலும்புக்கூடுகள் மீட்பு..

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Frankfurt, Germany

06 Jun, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், ஜெர்லாஃபிங்கன், Switzerland

05 Jun, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தாவடி தெற்கு கொக்குவில், Lenzburg, Switzerland, Staufen, Switzerland

22 May, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், London, United Kingdom

10 Jun, 2015
நன்றி நவிலல்

கோண்டாவில், Geseke, Germany

08 May, 2026
மரண அறிவித்தல்

ஆவரங்கால், India, ஈரான், Iran, பிரான்ஸ், France, Herborn, Germany

30 May, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

08 Jun, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொடிகாமம், வெள்ளாம்போக்கட்டி, புளியம்பொக்கணை, வவுனியா, கொழும்பு

11 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், புங்குடுதீவு 5ம் வட்டாரம், செட்டிக்குளம், பேர்லின், Germany

04 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுவன், நுவரெலியா

10 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கணுக்கேணி மேற்கு, Essex, United Kingdom

03 Jun, 2023
மரண அறிவித்தல்

தெல்லிப்பளை, சூரிச், Switzerland

04 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Bristol, United Kingdom

08 Jun, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, இணுவில் மேற்கு

21 May, 2025
மரண அறிவித்தல்

மீசாலை, Lucerne, Switzerland

06 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மாதகல், நல்லூர், புளியங்குளம், மதவுவைத்தகுளம்

09 May, 2026
மரண அறிவித்தல்

வசவிளான், யாழ்ப்பாணம், Canberra, Australia

03 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மருதங்கேணி, யோகபுரம், பளை, யாழ்ப்பாணம், சென்னை, India

08 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி, Zürich, Switzerland

05 Jun, 2022
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, நல்லூர், கொழும்பு

05 Jun, 2016
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, வாணக்குடியிருப்பு, தம்பசிட்டி, கொழும்பு, London, United Kingdom

28 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொட்டாஞ்சேனை

03 Jun, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US