தண்ணிமுறிப்பு கமக்கார அமைப்பின் பிரச்சினைகளை கேட்டறிந்த முல்லைத்தீவு அரசாங்க அதிபர் (Photos)
முல்லைத்தீவு மாவட்டத்தின் தண்ணிமுறிப்பு கமக்கார அமைப்புக்களின் பிரதிநிதிகளுக்கும் மாவட்ட அரசாங்க அதிபர் அ.உமாமகேஸ்வரனுக்கும் இடையிலான கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.
இந்த கலந்துரையாடல் இன்றைய தினம் (10.07.2023) மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது. இதில் தண்ணிமுறிப்பு விவசாயப் பிரதிநிதிகள் தாங்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் மாவட்ட அரசாங்க அதிபரிடம் தெரியப்படுத்தியுள்ளனர்.
தற்போது சிறுபோக அறுவடை ஆரம்பமாகவுள்ள நிலையில் நெல் கொள்வனவின் விலை தனியார் அரிசி ஆலை உரிமையாளர்களால் மிகக் குறைந்த விலைக்குக் கொள்வனவு செய்யப்படுவதாகவும் இதனால் தாம் பெரும் நஷ்டத்தினை எதிர்நோக்க வேண்டியுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
கட்டுப்பாட்டு விலை
அத்தோடு, தண்ணிமுறிப்பு வயல்வெளிக்குச் செல்லும் தெற்கு வாய்க்கால் மற்றும் மத்திய வாய்க்கால் வீதிகள் நீண்டகாலமாகப் புனரமைப்புச் செய்யப்படாத நிலையில் விவசாயிகள் தங்கள் விவசாய நடவடிக்கையினை கடும் சிரமத்திற்கு மத்தியில் முன்னெடுப்பதாகத் தெரிவித்துள்ளனர்.
தொடர்ந்து நெல் அறுவடை செய்யும் இயந்திரங்களுக்குக் கட்டுப்பாட்டு விலையினை நிர்ணயம் செய்து நடைமுறைப்படுத்த வேண்டும் எனவும் தங்கள் கோரிக்கைகளைக் கமக்கார அமைப்பின் பிரதிநிதிகள் முன்வைத்துள்ளனர்.
பொருளாதார நிதி நிலைமை
இதற்குப் பதில் வழங்கிய மாவட்ட அரசாங்க அதிபர் தற்போது தீர்க்கக்கூடிய பிரச்சினைகளை உரிய அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு நடவடிக்கையினை மேற்கொள்வதாகவும், அதேநேரம் நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நிதி நிலைமை காரணமாக தற்போது பாரிய வேலைத்திட்டங்களை முன்னெடுக்க உறுதி வழங்கமுடியாதெனவும் தெரித்துள்ளார்.
இந்தக் கலந்துரையாடலில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் (நிர்வாகம்), மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.குணபாலன் (காணி), பிரதம உள்ளகக் கணக்காய்வாளர் ம.செல்வரட்ணம் ஆகியோர் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |








1000 ஆண்டுகளுக்கு பிறகு காஷ்மீர் பிரச்சினையில்.. - டிரம்ப் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு News Lankasri
