மகிந்த ராஜபக்சவிற்காக தம்பதியினர் செய்த செயல்! பலரையும் அதிர வைத்த பாசம்
ஒரு தம்பதியினர், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை சந்திப்பதற்காக குருநாகல், கல்கமுவவிலிருந்து தங்காலைக்கு உந்துருளி மூலம் பயணித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மகிந்த ராஜபக்சவின் மீதான அன்பின் காரணமாக இந்த பயணத்தை மேற்கொள்ள முடிவு செய்ததாக அந்த தம்பதியினர் தெரிவித்துள்ளனர்.
உந்துருளியில் பயணம்
இதன்படி, குறித்த தம்பதியினர், சுமார் ஆறு மணித்தியாலங்கள் உந்துருளியில் பயணம் செய்து முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை சந்திக்க சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர்கள், முன்னாள் ஜனாதிபதியைச் சந்தித்து பின்னர் சிநேகபூர்வமான உரையாடலில் ஈடுபட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தனது உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து வெளியாகி அவருடைய சொந்த ஊரான தங்காலைக்கு சென்றார்.
காலை தொட்டு வணங்கி ஆசிர்வாதம்
இதன்பின்னர் மகிந்த ராஜபக்சவை காண்பதற்காக தங்காலையில் அமைந்துள்ள அவரது கால்டன் இல்லத்திற்கு மக்கள் சென்றனர்.
மகிந்தவின் சுக துக்கம் குறித்து விசாரிப்பதற்காக தாம் வந்ததாக அவர்கள் தெரிவித்திருந்தனர்.
இதேவேளை மகிந்தவின் தங்காலை வீட்டிற்கு சென்ற பலரும் அவரின் காலை தொட்டு வணங்கி ஆசிர்வாதமும் பெற்றுக்கொண்டுள்ளனர்.
அத்துடன் நாட்டை காப்பாற்றிய மகிந்த மீது தாம் அன்பு செலுத்துவதாகவும் அவர்கள் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.




