விஜேராம இல்லத்தின் புதுப்பிப்பு பணிக்காக கொட்டப்பட்ட கோடிகள்.. வெளிவரும் அதிர்ச்சி தகவல்!
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் விஜேராம இல்லத்தின் புதுப்பிப்பு பணிக்காக மட்டும் 47 கோடி ரூபா செலவிடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ரத்னசிறி இது குறித்து கருத்து வெளியிட்டுள்ளார்.
பொதுக் கூட்டமொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
முப்பதாயிரம் சதுர அடி
முப்பதாயிரம் சதுர அடி பரப்பளவு கொண்ட குறித்த வீட்டை மகிந்த ராஜபக்ச ஆக்கிரமித்திருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனவே, அவரை குறித்த வீட்டிலிருந்து வெளியேற்றியதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதிகளின் உரிமைகளை நீக்குவதற்கான சட்டமூலம் நிறைவேற்றப்பட்டதன் பின்னர், மகிந்த ராஜபக்ச, விஜேராம இல்லத்திலிருந்து வெளியேறி தங்காலை கால்டன் இல்லத்திற்கு சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |




