அரசாங்கம் ராஜபக்சர்களை பழிவாங்குகிறதா...! மகிந்த கூறும் பதில்
தங்கள் அரசியலுக்கு ஆபத்தான அனைவரையும் அரசாங்கம் பழிவாங்கின்றது என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
தனியார் ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் கூறுகையில்,
“அரசாங்கங்கள் எடுக்கும் சில முடிவுகள், சரியாக இருக்கலாம் அல்லது பிழையாகவும் இருக்கலாம்.
மக்களுடனான சந்திப்பு
இந்த அரசாங்கம் ராஜபக்சர்கள் உட்பட அவர்களின் அரசியலுக்கு ஆபத்தான அனைவரையும் பழிவாங்க நினைக்கின்றது. அதனை ஒரு பிரச்சினையாக நாம் கருதவில்லை.
எனக்கு சொந்த வீட்டிற்கு வருவது போல ஒரு சந்தோசம் வேறு எதிலும் இல்லை. இங்கிருந்து மேற்கொள்ளும் அரசியலை இங்கிருந்தே மேற்கொள்வோம்.
இங்கு மக்களை சந்திப்பதற்கும் அவர்களை சந்தித்து கலந்துரையாடுவதற்கும் இலகுவாக உள்ளது. அத்துடன், அரசாங்கம் அவர்களுக்கு அதிகாரத்தை வழங்கியுள்ள நிலையில், நாம் அவர்களுக்கு இடமளிக்க வேண்டும்.
அவர்களின் அரசியலில் பிழை இருந்தால் நாம் அதனை மக்களுக்கு சுட்டிக்காட்டுவோம்” எனத் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |




