முல்லைத்தீவு விவசாயிகளிடம் நெல்லினை கொள்வனவு செய்வது தொடர்பில் அரசாங்க அதிபர் கருத்து

Advanced Agri Farmers Mission Mullaitivu
By Keethan Mar 26, 2023 07:05 PM GMT
Report

விவசாயிகளிடம் நெல்லினை கொள்வனவு செய்வதற்கு நெல் சந்தைப்படுத்தல் சபைக்கு வங்கி 27 வீதம் கடன் வட்டி கோரியுள்ள நிலையில்,  அவ்வாறு பெற்று நெல்லினை கொள்வனவு செய்து வழங்கமுடியாது என்று நெல் சந்தைப்படுத்தும் சபை அதனை நிறுத்தியுள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் க.விமலநாதன் தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் இன்று (26.03.23) வறிய மக்களுக்கான அரிசி வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போது இதனை தெரிவித்துள்ளார்.

மேலும் கருத்து தெரிவிக்கையில்,

வறுமைக்குட்பட்ட மக்கள்

வறுமைக்குட்பட்டவர்கள், சமுர்த்திபெறுவர்கள், சமூர்த்தி பெற தகுதி உள்ளவர்களுக்கு பங்குனி, சித்திரை மாதம் குடும்பத்திற்கு 10 கிலோ படி மாவட்டத்தில் 33ஆயிரத்தி 303 குடும்பங்கள் இதனால் நன்மையடையக்கூடிய வாய்ப்புள்ளது.

முல்லைத்தீவு விவசாயிகளிடம் நெல்லினை கொள்வனவு செய்வது தொடர்பில் அரசாங்க அதிபர் கருத்து | Mullaitivu Agri Farmers

மாவட்டத்தில் உள்ள விவசாயிகளிடம் இருந்து கிலோ 100 ரூபாவிற்கு நெல்லினை கொள்வனவு செய்யப்பட்டது. 119 மில்லியன் தேவைப்பாடு இருந்தது அதற்கு நெல்லினை கொள்வனவு செய்துள்ளோம்.

ஏனைய மாவட்டங்களில் யாழ்ப்பாண மாவட்டத்திற்கு 3400 மெற்றிக்தொன் நெல் தேவைப்பட்டது. இதில் ஒரு பகுதியினை தருவதாக உறுதி மொழி வழங்கியுள்ளோம் கொழும்பு, கண்டி,கம்பஹா  மலைநாடு போன்ற பிரதேசங்களில் அரிசிக்கான தேவைப்பாடு உள்ளது.

வடகு கிழக்கு மாவட்டங்களை வைத்து அவர்கள் கேட்கின்றார்கள். ஒட்டிசுட்டான், கரைதுறைப்பற்று, புதுக்குடியிருப்பு பகுதியில் இருந்து யாழ். மாவட்டத்திற்கு அரிசியினை வழங்கிவருகின்றோம். இன்றில் இருந்து நாடு தழுவிய ரீதியில் ஜனாதிபதியினால் அரிசியினை மக்களுக்கு வழங்கும் நிகழ்வு தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டுள்ளது.

தற்போது மாவட்டத்திற்கு மேலதிகமாக 319 மில்லியன் நிதியும் ஓதுக்கீடும் கிடைத்துள்ளது. பிரதேச செயலகத்திற்கு அதனை வழங்கியுள்ளோம். நெல்லினை பிரதேச செயலகம்தான் கொள்வனவு செய்து அரிசி ஆலைக்கு கொடுத்து பொதி செய்கின்றார்கள்.

இலங்கையில் 28 இலட்சம் பேர் சமூர்த்தி பெற தகுதியானவர்களும் சமூர்த்திபெறுவர்களும் இருக்கின்றார்கள். இலங்கைக்கு ஒரு மாதத்திற்கு 44 ஆயிரம் மெற்றிக்தொன் தேவைப்படுகின்றது.

முல்லைத்தீவு மாவட்டத்திற்கு தேவையான நெல்லினை கொள்வனவு செய்து அரிசியாக்கி வைத்துள்ளோம். ஏனைய மாவட்டங்களுக்கும் நெல்லினை கொடுக்கவேண்டிய தேவை இருக்கின்றது.  விவசாயிகள் நெல்லினை அறுவடை செய்யும் போது மிக குறைந்த விலையில் நெல்லினை வியாபாரிகளுக்கு வழங்கினார்கள்.

விவசாயிகள் தங்கள் நெல்லினை நெல்கொள்வனவு சபை கொள்வனவு செய்வதாக எதிர்பாத்திருதார்கள் இந்த முறை அதற்கான ஏற்பாடு செய்யப்படவில்லை காரணம் விவசாயிகளிடம் நெல்லினை கொள்வனவு செய்வதற்கு நெல் சந்தைப்படுத்தல் சபைக்கு வங்கி 27 வீதம் வட்டி கோரிய நிலையில் அவ்வாறு பெற்று நெல்லினை கொள்வனவு செய்து வழங்கமுடியாது என்று நெல் சந்தைப்படுத்தும் சபை அதனை நிறுத்தி வைத்துள்ளது. 

ஜனாதிபதியின் செயற்திட்டம் 

அதன் பின்னர்தான் ஜனாதிபதி இந்த செயற்திட்டம் ஊடாக விவசாயிகளிடம் இருந்து 100 ரூபாவிற்கு நெல்லினை கொள்வனவு செய்து வறிய மக்களுக்கு அரிசியாக வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

நெல்லினை விவசாயிகள் ஆரம்பத்தில் கொடுப்பதற்கு பயயந்து பயந்து இருந்தார்கள். கடந்த காலங்களில் விவசாயிகள் நெல் சந்தைப்படுத்தல் சபைக்கு நெல்லினை விற்றுவிட்டு மாதக்கணக்கில் நிதிகிடைக்காமல் இருந்தார்கள்.

ஆனால் இப்போது அவ்வாறு நெல்லினை கொடுத்துவிட்டு இரண்டு மூன்று நாட்களுக்குள் நிதி வழங்கப்படுகின்றது. ஒரு விவசாயிடம் இருந்து 5ஆயிரம் கிலோவினையே கொள்வனவு செய்யப்படும் ஒருவர் தொடர்ச்சியாக முழு நெல்லினையும் வழங்க முடியாது.

ஆகவே இந்த செயற்பாடு சிறந்த செயற்பாடாக வறிய மக்களுக்கு அமைந்துள்ளது‘ என்றும் மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவித்துள்ளார்.

மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மட்டக்குளி

25 Apr, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, கிளிநொச்சி, London, United Kingdom

23 Apr, 2025
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர், மல்லாவி யோகபுரம்

22 Apr, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தொல்புரம் கிழக்கு

23 Mar, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, Markham, Canada

16 Apr, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, மண்கும்பான், கனடா, Canada

21 Apr, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், வவுனியா, பிரான்ஸ், France

21 Apr, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, Versailles, France

24 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம்

21 Apr, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

சங்கானை கிழக்கு, Meaux, France

16 Apr, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, அல்லைப்பிட்டி

21 Apr, 2013
2ஆம் ஆண்டு நினைவஞ்சலி. 15ஆம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொள்ளுப்பிட்டி

21 Apr, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Toronto, Canada

03 May, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கனடா, Canada

19 Apr, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், நியூ யோர்க், United States

20 Apr, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சண்டிலிப்பாய், கொழும்பு

19 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பிரான்ஸ், France

18 Apr, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US