மல்லாவியில் துப்பாக்கிச்சூடு : 23 வயதான இளைஞர் பலி
முல்லைத்தீவு மாவட்டத்தின் மல்லாவி, பாலி நகர் பகுதியில் உள்ள வீடு ஒன்றுக்குள் புகுந்த அடையாளம் தெரியாத நபர்கள், வீட்டில் உறங்கிக்கொண்டிருந்த இளைஞர் ஒருவரை துப்பாக்கியால் சுட்டுக்கொன்றுவிட்டு தப்பிச்சென்றுள்ளதாக மல்லாவி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் ஞாயிற்றுக்கிழமை (09) இரவு 10 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் மல்லாவி, பாலி நகரைச் சேர்ந்த மகேந்திரன் டிலக்சன் என்ற 23 வயதுடைய இளைஞரே உயிரிழந்துள்ளார்.
இதேவேளை, நேற்று இரவு பாலிநகர் பகுதியில் இடம்பெற்ற வாள் வெட்டு தாக்குதலுக்கு இலக்கான நிலையில் படுகாயமடைந்திருந்த இருவரில் ஒருவர் மல்லாவி ஆதார வைத்தியசாலையிலும், மற்றையவர் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பொலிஸார் விடுத்துள்ள பணிப்புரை
மேலும், நேற்று மாலை பாலிநகர் பகுதியில் இரு குழுக்களிடையே இடம்பெற்ற மோதல் சம்பவம் காரணமாக இந்த துப்பாக்கி சூடு நடத்தப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் மல்லாவி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதன்போது சம்பவ இடத்திற்கு வருகை தந்திருந்த கிளிநொச்சி மாவட்ட தடயவியல் பொலிஸார் விசாரனைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வருகை தந்த மாவட்ட நீதவான் உடற்கூறாய்வு பரிசோதனையின் பின்னர் சடலத்தை உறவினர்களிடம் கையளிக்குமாறு பொலிஸாருக்கு பணித்துள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
ஈழத் தமிழர்களின் விடுதலைக்கான பாதையை யார் வழிநடத்துவது.. 13 மணி நேரம் முன்
ஆளுங்கட்சிக்கு மரண அடி கொடுத்துள்ள தேர்தல் முடிவுகள்: பிரதமர் ராஜினாமா செய்ய வலியுறுத்தல் News Lankasri
ரோஹினியால் பாத்ரூமில் மறைந்து கதறும் மனோஜ், விஜயாவிற்கு ஷாக் கொடுத்த மீனா.. சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam
என்னது மயில் கர்ப்பமா, வீட்டில் வெடித்த பெரிய பிரச்சனை... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் எபிசோட் Cineulagam
ட்ரம்ப் எந்த நேரத்திலும் முடிவெடுக்கலாம்... ஈரானில் இருந்து தூதரக அதிகாரிகளை வெளியேற்றிய பிரித்தானியா News Lankasri
புதிய நிகழ்ச்சியை தொடங்கியுள்ள விஜய் டிவி... முதலில் கலந்துகொள்ளும் பிரபலங்கள் யார் பாருங்க Cineulagam