உழவு இயந்திரம் விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழப்பு (Photos)
முல்லைத்தீவு - ஒட்டுசுட்டான் பிரதேசத்தில் உழவு இயந்திரம் ஒன்று வேகக்கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதில் குடும்பஸ்தரொருவர் உயிரிழந்துள்ளார்.
விபத்திற்குள்ளாகிய உழவு இயந்திரம்
இந்த விபத்து சம்பவம் நேற்று (13.09.2022) இடம்பெற்றுள்ளது.
பெரியசாமி ராஜ்குமார் (வயது 32) என்ற குடும்பஸ்தரே விபத்தில் உயிரிழந்துள்ளார்.
சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு
விபத்தில் காயமடைந்த சாரதி அங்கிருந்த மக்களால் ஒட்டுசுட்டான் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோதும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவரின் சடலம் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளதுடன், விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை ஒட்டிசுட்டான் பொலிஸார்
மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.





எதிர்நீச்சல் தொடர்கிறது: ஜீவானந்தம் உயிருடன் இருப்பதை அறியும் ஆதி குணசேகரன்! கொலை செய்ய வரும் அடியாட்கள் Cineulagam

பிரித்தானியாவின் One in, one out திட்டத்தை கேலி செய்யும் வகையில் நேற்று நிகழ்ந்த விடயம் News Lankasri
