சட்டவிரோத தொழில் நடவடிக்கைகளுக்கு உடந்தையாக இருக்கும் அதிகாரிகளை இடமாற்ற நடவடிக்கை: அமைச்சர் உறுதி
முல்லைத்தீவு மாவட்ட கடற்தொழிலாளர் சம்மேளத்தினரின் வேண்டுகோளுக்கு இணங்க முல்லைத்தீவு மாவட்டத்தில் தடைசெய்யப்பட்ட தொழில் நடவடிக்கைகளுக்கு உடந்தையாக இருக்கும் அதிகாரிகளை இடமாற்றம் செய்வதாக கடற்தொழில் அமைச்சர் உறுதி அளித்துள்ளார் என்று முல்லைத்தீவு மாவட்ட கடற்தொழிலாளர் சம்மேளன தலைவர் அருள்நாதன் தெரிவித்துள்ளார்.
முல்லைத்தீவு மாவட்ட கடற்தொழிலாளர் சம்மேளத்தினரின் ஏற்பாட்டில் முல்லைத்தீவு ஊடக அமையத்தில் இன்று (26) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் அவர் இதனை தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், “அதிக விலையில் மண்ணெண்ணையினை பெற்று தொழில் செய்தால் மீன்களை விற்க முடியாத நிலை காணப்படுகின்றது.
இந்த நிலையில் கடந்த 23ஆம் திகதி முல்லைத்தீவு மாவட்டத்தின் கடற்தொழில் நிர்வாகத்தினருடன் கடற்தொழில் அமைச்சரை சந்தித்தோம்.
அங்கு முல்லைத்தீவு மாவட்ட கடற்தொழில் நீரியல் வளத்திணைக்கள அதிகாரிகளின் நடவடிக்கை குறித்து தெரியப்படுத்தியுள்ளோம்.
கடற்தொழில் அமைச்சர் இடமாற்ற நடவடிக்கை
முல்லைத்தீவு மாவட்டத்தில் தடைசெய்யப்பட்ட தொழில் நடவடிக்கைக்கு அதிகாரிகள் உடந்தையாக காணப்படுகின்றார்கள் இதற்கு அதிகாரிகளை மாற்றி சட்டவிரோத கடற்தொழில் நடவடிக்கையினை கட்டுப்படுத்த ஆவண செய்யுமாறு கேட்டுக்கொண்டதற்கு, அதற்கு அமைச்சர் ஒரு வாரத்தில் அதிகாரிகளை இடமாற்றம் செய்வதாக தெரிவித்துள்ளார்.
முல்லைத்தீவு மாவட்ட கடற்தொழில் நீரியல் வளத்திணைக்கள அதிகாரி மற்றும் இரண்டு அதிகாரிகளை மாற்றம் செய்யவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளோம்.
இதுவரை காலமும் நடந்ததை விட தற்போது மாற்றம் ஏற்பட்டுள்ளது. அதனால் அவரை நாங்கள் முழுமையாக நம்புகின்றோம் நாங்கள் கடற்தொழில் நீரியல் வளத்திணைக்கள பணிப்பாளர் நாயகத்தினையும் சந்தித்துள்ளோம்.
அவரும் விரைவில் முல்லைத்தீவு வருவதாக தெரிவித்துள்ளார். கடற்தொழில் அமைச்சரின் வாக்குறுதிகள் இனிவரும் காலத்தில் நிறைவேற்றுவார் என்று நாங்கள் நம்புகின்றோம்.
கடற்தொழிலாளர்களின் கோரிக்கை
இதன் போது, கடற்தொழிலாளருக்குரிய மண்ணெண்ணைய் எவ்வாறு கிடைக்கின்றது என்று ஊடகவியலாளர்களால் கேள்வியெழுப்பட்டது.
இதற்கு அவர் பதிலளிக்கையில், ஒரு தொழிலாளிக்கு 20 லீட்டர் மண்ணெண்ணைய் என்ற படி இன்றும் பல்நோக்கு கூட்டுறவு சங்கம் ஊடாக நீரியல் வளத்திணைக்களத்தினால் மண்ணெண்ணைய் வழங்கப்பட்டு வருகின்றது.
இந்த விலையில் எங்களால் எண்ணெய் வாங்கி தொழில் செய்ய முடியாது விலை குறைக்கப்பட வேண்டும் என்று கடற்தொழிலாளர்களின் கோரிக்கை முன்வைத்துள்ளோம்.
கடற்தொழிலாளர்களுக்கு மானியம் அல்லது விலைகுறைப்பு செய்ய வேண்டும் என்ற மக்களின் கோரிக்கமைய ஜனாதிபதியுடன் கலந்துரையாட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளோம்.
ஐனாதிபதி தற்போது வெளிநாடு சென்றுள்ளார். அவர் வந்தவுடன் இது தொடர்பில் சந்திப்பொன்று மேற்கொள்ளப்படும். மேலும் முல்லைத்தீவு மாவட்டத்தில் அதிகளவில் மீன்கள் பிடிக்கப்பட்டாலும் மக்களின் சுயதேவைக்கு பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
அதிக விலை மீன் விற்பனை
பேலியாகொட சந்தையில் மீன்களின் விலை குறைவாக காணப்பட்டாலும் முல்லைத்தீவு மாவட்டத்தில் மீன்களுக்கு அதிக விலை காணப்படுகின்றது.
கடல் உணவுகளை அதிக விலையில் விற்பதற்கு சம்மேளனம் நடவடிக்கை எதும் எடுத்துள்ளதாக என ஊடகவியலாளரினால் கேள்வியெழுப்பட்டது.
இதற்கு அவர் பதிலளிக்கையில், தற்போது நாட்டில் கடற்தொழிலாளர்கள் எரிபொருள் தட்டுப்பாடு நிலவி வருகின்றது எரிபொருள் சரியான நிலைக்கு விற்கப்படுமாயின் விலை குறையும். முல்லைத்தீவு மாவட்டத்தில் 1200 படகுகள் தொழிலுக்கு முன்னர் செல்லும்.
ஆனால் தற்போது எரிபொருள் பிரச்சினையால் 100 படகுகளில் தான் கடற்தொழிலில் ஈடுபடுகின்றனர் ”என்றும் அவர் தெரிவித்துள்ளார்.





ஐ.நா வினால் ஈழத் தமிழர்களுக்கு நீதியைப் பெற்றுக் கொடுக்க முடியுமா..! 2 மணி நேரம் முன்

பிரித்தானியாவின் One in, one out திட்டத்தை கேலி செய்யும் வகையில் நேற்று நிகழ்ந்த விடயம் News Lankasri
