சட்டவிரோத கடற்றொழில்களுக்கு எதிராக தொடர் கவனயீர்ப்பில் ஈடுபட்டுள்ள முல்லைத்தீவு கடற்றொழிலாளர்கள்

Mullaitivu Sri Lanka Fisherman
By Shan Mar 31, 2026 06:19 AM GMT
Report

சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகளுக்கு எதிராக முல்லைத்தீவு கடற்றொழில் நீரியல் வளத்திணைக்களத்திற்கு அருகில் முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழிலாளர்கள் தொடர் கவனயீர்ப்பு நடவடிக்கையொன்றினை நேற்று (30.03.2026) ஆரம்பித்துள்ளனர்.

முல்லைத்தீவு கடற்றொழிலாளர்கள் முன்னெடுத்துள்ள கவனயீர்ப்பு நடவடிக்கைக்கு ஆதரவு தெரிவித்து வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரனும் பங்கேற்றிருந்தார்.

அண்மைக்காலமாக முல்லைத்தீவு கடற்பரப்பில் வெளிச்சம் பாய்ச்சி மீன்பிடித்தல், சுருக்குவலை, வெடிவைத்து மீன்பிடித்தல் உள்ளிட்ட சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகள் அதிகரித்துள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

IMFஇன் அனுமதி கிடைக்கவிட்டால் பேரிடி - எரிபொருள் விலையில் பாரிய மாற்றம் ஏற்படலாம்..!

IMFஇன் அனுமதி கிடைக்கவிட்டால் பேரிடி - எரிபொருள் விலையில் பாரிய மாற்றம் ஏற்படலாம்..!

முறைப்பாடு

இந்நிலையில் இது தொடர்பாக முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழில் நீரியல் வளத்திணைக்களம் மற்றும் கடற்றொழில் அமைச்சர் என உரிய தரப்பினர்களிடம் பல தடவைகள் முறையிட்டுள்ள போதும் குறித்த சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகளைக் கட்டுப்படுத்த உரிய தரப்பினர் நடவடிக்கைகளை முன்னெடுக்கவில்லை என முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழிலாளர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

சட்டவிரோத கடற்றொழில்களுக்கு எதிராக தொடர் கவனயீர்ப்பில் ஈடுபட்டுள்ள முல்லைத்தீவு கடற்றொழிலாளர்கள் | Mullai Fishermen Raise Against Illegal Fishing

அத்தோடு இந்த சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகளைக் கட்டுப்படுத்துமாறு அண்மையில் முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழில் நீரியல் வளத்துறைத் திணைக்களத்தின் உதவிப்பணிப்பாளரிடம் முறையிட்டபோது, குறித்த சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகளைக் கட்டுப்படுத்த தம்மிடம் போதிய ஆளணி வசதிகள் இல்லையெனத் தெரிவித்ததுடன், எனவே தம்மால் சட்டவிரோத கடற்றொழில் செயற்பாட்டைக் கட்டுப்படுத்தமுடியாதெனத் தெரிவித்ததாகவும் கடற்றொழிலாளர்கள் சுட்டிக்காட்டப்பட்டது.

இத்தகைய சூழலில் சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகள் முல்லைத்தீவு கடற்பரப்பில் அதிகரித்துள்ளதால் தமது வாழ்வாதாரம் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக கடற்றொழிலாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

தீயிட்டுப் பொசுக்க தயார்! அமெரிக்காவை மிரள வைக்கும் ஈரானிய இராணுவ பேச்சாளரின் பகீர் தகவல்

தீயிட்டுப் பொசுக்க தயார்! அமெரிக்காவை மிரள வைக்கும் ஈரானிய இராணுவ பேச்சாளரின் பகீர் தகவல்

சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடு

சட்டவிரோத கடற்றொழில்களுக்கு எதிராக தொடர் கவனயீர்ப்பில் ஈடுபட்டுள்ள முல்லைத்தீவு கடற்றொழிலாளர்கள் | Mullai Fishermen Raise Against Illegal Fishing

இந்நிலையில் முல்லைத்தீவு கடற்பரப்பில் அதிகரித்துள்ள குறித்த சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகளை முற்றாக கட்டுப்படுத்த வலியுறுத்தியே முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்களைச் சேர்ந்த கடற்றொழிலாளர்கள் ஒன்றிணைந்து இவ்வாறாக தொடர் கவனயீர்ப்பு நடவடிக்கையை ஆரம்பித்துள்ளனர்.

அத்தோடு முல்லைத்தீவிற்கு கடற்றொழில் அமைச்சர் இன்று வருகைதரவுள்ளதாக கூறப்படும் நிலையில், அவ்வாறு வருகைதருகின்ற கடற்றொழில் அமைச்சர் முல்லைத்தீவு கடற்பரப்பில் இடம்பெறும் சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகளைக் கட்டுப்படுத்துவது தொடர்பில் தமக்கு முறையான தீர்வினை வழங்கவேண்டுமென கடற்றொழிலாளர்கள் இதன்போது தெரிவிக்கப்பட்டது.

சட்டவிரோத கடற்றொழில்களுக்கு எதிராக தொடர் கவனயீர்ப்பில் ஈடுபட்டுள்ள முல்லைத்தீவு கடற்றொழிலாளர்கள் | Mullai Fishermen Raise Against Illegal Fishing

தவறினால் தமது சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகளுக்கெதிரான எதிர்ப்பு நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படுமெனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் இவ்வாறு கடற்றொழிலாளர்களால் தொடர் கவனயீர்ப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுவரும் இடத்திற்கு அதிகளவான பொலிஸார் பேருந்தில் வரவழைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

சட்டவிரோத கடற்றொழில்களுக்கு எதிராக தொடர் கவனயீர்ப்பில் ஈடுபட்டுள்ள முல்லைத்தீவு கடற்றொழிலாளர்கள் | Mullai Fishermen Raise Against Illegal Fishing

4ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன், Wil, Switzerland

16 Jun, 2022
மரண அறிவித்தல்

புளியங்கூடல், Toronto, Canada

29 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, கண்டி, Woodbridge, Canada

28 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல் மேற்கு, மாதகல்

30 Jun, 2011
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

28 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Vitry, France

21 Jun, 2016
மரண அறிவித்தல்

கரவெட்டி கிழக்கு, Narvik, Norway, Oslo, Norway

26 Jun, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Montreal, Canada, நியூ யோர்க், United States

25 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மிருசுவில், Toronto, Canada

01 Jul, 2025
மரண அறிவித்தல்
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், மன்னார், கண்டி

03 Jul, 2015
14ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு, கனடா, Canada

29 Jun, 2012
நன்றி நவிலல்

நெல்லியடி, London, United Kingdom, Melbourne, Australia

30 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, North York, Canada

13 Jul, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை சோளாவத்தை, London, United Kingdom

27 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய் மேற்கு, சுன்னாகம்

29 Jun, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Noisiel, France

29 Jun, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துணுக்காய், புத்தூர், பேர்ண், Switzerland

14 Jul, 2022
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, சிட்னி, Australia, கொழும்பு

28 Jun, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், ஆறுகால்மடம், பிரான்ஸ், France

24 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சிறுப்பிட்டி, Edgware, United Kingdom

27 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, உருத்திரபுரம், Montreal, Canada

30 Jun, 2021
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US