ட்ரம்ப் பதவியேற்பு விழாவில் பங்கேற்கவுள்ள தொழிலதிபர் முகேஷ் அம்பானி
பிரபல தொழிலதிபரான முகேஷ் அம்பானி(Mukesh Ambani), மற்றும் அவரது மனைவி நீடா அம்பானிக்கு அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்கவுள்ள டொனால்ட் ட்ரம்ப்பின்(Donald Trump) பதவியேற்பு விழாவில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவிற்கான(USA) புதிய ஜனாதிபதியைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல், கடந்த ஆண்டு இறுதியில் நடந்தது. இதில் குடியரசுக் கட்சியைச் சேர்ந்த முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அபார வெற்றி பெற்றார்.
முகேஷ் அம்பானிக்கு அழைப்பு
இதையடுத்து அமெரிக்காவின் 47ஆவது ஜனாதிபதியாக எதிர்வரும் 20ஆம் திகதி ட்ரம்ப் பதவியேற்க உள்ளார்.
அவருக்கு அந்நாட்டு உச்சநீதிமன்ற நீதிபதி ஜோன் ரோபர்ட்ஸ் பதவிப் பிரமாணம் செய்து வைக்க உள்ளார்.
இந்நிலையில், பிரபல தொழிலதிபரான முகேஷ் அம்பானி, நீடா அம்பானி தம்பதிக்கும் டிரம்ப் பதவியேற்பு விழாவில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதற்காக அம்பானி தம்பதியினர் அமெரிக்கா செல்லவுள்ளனர்.
மேலும், பதவியேற்பு விழாவுக்கு முன் ட்ரம்ப் மற்றும் துணை ஜனாதிபதியாக தேர்வாகியுள்ள ஜே.டி. வான்ஸ் ஆகியோர் அளிக்கும் இரவு விருந்திலும் அம்பானி தம்பதி கலந்துகொள்வார்கள் என்று கூறப்படுகிறது.
ட்ரம்ப் பதவியேற்பு விழாவில் இந்தியா சார்பில் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் பங்கேற்க உள்ளார் என இந்திய வெளியுறவு அமைச்சகம் உறுதிப்படுத்தியுள்ளது.
ட்ரம்ப் பதவியேற்பு விழா
மேலும், சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங், இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி, அர்ஜென்டினா ஜனாதிபதி ஜாவியர் மிலேய், எல் சல்வேடார் தலைவர் நயீப் புகேல், பிரேசில் ஜனாதிபதி ஜெயிர் போல்சனரோ உள்ளிட்ட பலருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
டெஸ்லா நிறுவனத்தின் எலான் மஸ்க், அமேசான் நிறுவனர் ஜெப் பெஸோஸ், மெட்டா நிறுவனர் மார்க் ஜூக்கர்பெர்க் உள்ளிட்டோரும் ட்ரம்ப் பதவியேற்பு விழாவில் கலந்துகொள்கின்றனர்.
ஜனாதிபதி பதவியேற்பு விழா பொதுவாக, அமெரிக்க ஐக்கிய நாடுகளின் சட்டப்பேரவைக்கு அருகே பொதுவெளியில் நடத்தப்படும் சூழ்நிலையில், இந்த முறை கடும் குளிர் காரணமாக மைதானத்தில் நடத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





விளாடிமிர் புடின் உட்பட... சீனாவில் ஒன்று கூடும் உலகத்தலைவர்கள்: ட்ரம்பிற்கு புதிய நெருக்கடி News Lankasri

சன் டிவியில் ஒளிபரப்பாகும் 2 ஹிட் சீரியல்களின் மெகா சங்கமம்... எந்தெந்த தொடர்கள் தெரியுமா? Cineulagam

அபாயகரமான முறையில் குழந்தைகளுடன் கடலுக்குள் இறங்கும் புலம்பெயர்வோர்: பதறவைக்கும் காட்சிகள் News Lankasri

ரவி மோகன் பேசியதை கேட்டு கெனிஷா கண்ணீர்.. சொத்துக்கள் முடக்கம், பிரச்சனைகள் பற்றி எமோஷ்னல் Cineulagam

உக்ரைனுக்கு எதிராக மீண்டும் அதிரடி முடிவெடுத்த கிம் ஜோங் உன்... 100,000 வீரர்கள் தயார் News Lankasri
