ஈரானில் மன்றுக்குள்ளேயே சுட்டுக்கொல்லப்பட்ட நீதியரசர்கள்
ஈரானிய உயர்நீதிமன்றத்தின் மூத்த நீதியரசர்கள் இருவர் தலைநகர் தெஹ்ரானில் சுட்டுக் கொல்லப்பட்டதாக ஈரானின் நீதித்துறை தெரிவித்துள்ளது.
உயர்நீதிமன்றத்திற்குள் நீதியரசர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய பின்னர் தாக்குதல் நடத்தியவர் தவறான முடிவை எடுத்ததாகவும், நீதிபதிகளில் ஒருவரின் மெய்க்காப்பாளர் காயமடைந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
படுகொலைக்கான நோக்கம் இன்னும் தெளிவாகத் தெரியவில்லை எனினும், குறித்த இரண்டு நீதியரசர்களும், நீண்ட காலமாக உளவு பார்த்தல் மற்றும் பயங்கரவாதம் உள்ளிட்ட தேசிய பாதுகாப்பு வழக்குகளை விசாரணை செய்து வந்துள்ளனர். அத்துடன், பல உண்மைகளையும் கண்டறிந்துள்ளனர்.
அரச தொலைக்காட்சி வெளியிட்ட தகவல்
இது எதிரிகளிடையே கோபத்தையும் வெறுப்பையும் தூண்டியுள்ளதன் அடிப்படையிலேயே அவர்கள் கொல்லப்பட்டிருக்கலாம் என்று அரச அதிகாரி ஒருவர் சந்தேகம் வெளியிட்டுள்ளார்.
குறிப்பாக குறித்த வழக்குகள் இஸ்ரேலுடன் தொடர்புடைய தனிநபர்கள் மற்றும் அமெரிக்காவால் ஆதரிக்கப்படும் ஈரானிய எதிர்க்கட்சியுடன் தொடர்புடையவை என்று அரச தொலைக்காட்சி கூறியுள்ளது. எனினும், மேலதிக தகவல்கள் எதையும் அரச தொலைக்காட்சி வழங்கவில்லை.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |