டயானாவின் வெற்றிடத்திற்கு யார்..!
ராஜாங்க அமைச்சர் டயனா கமகேவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி வெற்றிடத்திற்கு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் நியமிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
டயனா கமகே ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப் பட்டியல் ஊடாக நாடாளுமன்றம் தெரிவாகியிருந்தார்.
பின்னர் அவர் ஆளும் கட்சிக்கு ஆதரவளிப்பதாக அறிவித்து அரசில் இணைந்து கொண்டார்.

இரட்டைக் குடியுரிமை கொண்ட காரணத்தினால் டயனா நாடாளுமன்ற உறுப்பினராக பதவி வகிக்க தகுதியற்றவர் என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
உள்ளுராட்சி மன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்ட போது முஜிபுர் ரஹ்மான் கொழும்பு மாநகரசபையின் மேயர் வேட்பாளராக போட்டியிடும் நோக்கில் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலகினார்.
எனினும் முஜிபுர் ரஹ்மானை தேசியப் பட்டியலின் ஊடாக மீண்டும் நாடாளுமன்ற உறுப்பினராக நியமிப்பது குறித்து ஐக்கிய மக்கள் சக்தியின் அதிகாரபூர்வ அறிவிப்பு இதுவரையில் வெளியிடப்படவில்லை.
மறுபுறத்தில் மட்டக்களப்பு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அமீர் அலிக்கு அதனைப் பெற்றுக் கொடுப்பதில் ரிசாத் தரப்பும் தீவிரமாக செயற்படுவதாக தெரிய வந்துள்ளது
வீசா மோசடியை அம்பலப்படுத்திய இளைஞருக்கு நெருக்கடி கொடுத்தால் போராட்டம் வெடிக்கும்: ஜே.வி.பி. எச்சரிக்கை
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
சக்தியை கண்டுபிடிக்க போராடும் ஜனனி.. பார்கவியை வீட்டை விட்டு துரத்தும் ஆதி குணசேகரன்.. எதிர்நீச்சல் புரோமோ வீடியோ Cineulagam
Bigg Boss: கொடுத்த வேலையை பார்க்க வக்கில்ல.... நான் உங்ககிட்ட பேசலை! திவ்யாவை கிளித்தெடுத்த விஜய்சேதுபதி Manithan
களமிறக்கப்பட்ட B-52 அணு குண்டுவீச்சு விமானம்... பயணிகள் விமானங்களுக்கு அமெரிக்கா எச்சரிக்கை News Lankasri