இரு பிரபல கிரிக்கெட் வீரர்களின் ஊழலை அம்பலப்படுத்திய முஜுபுர் ரஹ்மான்
இலங்கையின் பிரபலமான கிரிக்கெட் வீரர்களுக்கு சொந்தமான இரு நிறுவனங்களுக்கு டெண்டர் கோராமல் முறையற்றவிதத்தில் திட்டங்கள் வழங்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்றத்தில் முஜுபுர் ரஹ்மான் அம்பலப்படுத்தினார்.
கொழும்புத் துறைமுக நகரப் பொருளாதார ஆணைக்குழு (திருத்தச்) சட்டமூலம் தொடர்பான இரண்டாம் மதிப்பீடு மீதான விவாதம் இன்று (07.01.2026) நாடாளுமன்றத்தில் நடைபெற்றது.
இதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இதனை தெரிவித்துள்ளார்.
தொடர்ந்துரையாற்றிய அவர்,
இரு பிரபலமான கிரிக்கெட் வீரர்கள்
குறித்த இரு பிரபலமான கிரிக்கெட் வீரர்களும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்காக பாரிய பிரசாரங்களில் ஈடுபட்டவர்களாவர்.அவருக்காக பல சந்திர்ப்பங்களில் முன்னிலை கருத்து தெரிவித்தவர்கள்.
இவர்கள் முன்னாள் பிரபலமான கிரிக்கெட் வீரர்கள்.இலங்கையின் நாமத்தை சர்வதேசத்திற்கு கொண்டு சென்றவர்கள் என்பதால் பெயரை குறிப்பிடாமல் இருக்கிறேன் என்று தெரிவித்தார்.

இவர்கள் இருவரும் ஜனாதிபதிக்கு பின்னால் சென்றது டெண்டர் இல்லாமல் திட்டங்களை எடுக்கவா?. சூரிய மின்சக்தி மற்றும் காற்றாலை மின் திட்டங்களை செயற்படுத்த ஏழு நிறுவனங்களுக்கு டெண்டர் இல்லாமல் அனுமதி வழங்கப்பட்டுள்ளன.
அதில் சூரிய மின்சக்தி திட்டங்களை செயற்படுத்தும் இரு நிறுவனங்கள் இந்த கிரிக்கெட் வீரர்களுக்கு சொந்தமானது.
நடைமுறைப்படுத்தப்படும் பிரதேசங்கள்
ஓட்டமாவடியில் சூரியமின்சக்தி சோலார் போச் லிமிடட்- பூணானையில் சீக் எனர்ஜி லிமிடட்- கற்றாலை மின் திட்டம் கல்பிட்டியில் ஏசியன் வின் பவர்- திருகோணமலை நிலாவெளியில் சூரியமின்சக்தி திரீ ட்ளிவ் பவர் மெனேஜ்மென்ட் லிடமிடட் -மூதூரில் சூரியமின்சக்தி ஒபிடல் எனர்ஜி லிமிடட் -திருகோணமலையில் சூரியமின்சக்தி புலுசன் டெக்னோலஜி சிலேன் இலக்ரிக்கல் டிவலொப்மென்ட் ஆகிய நிறுவனங்களுக்கே திட்டங்கள் வழகப்பட்டுள்ளன.

இவ்வாறான செயற்படுகளின் பொது ஜனாதிபதி எந்நேரமும் கூறும் வாக்கியமான வெளிப்படைத்தன்மை எங்கே போனது என்று குறிப்பிட்டுள்ளார்.
இராணுவத்திற்கு என 1.5 டிரில்லியன் டொலர் ஒதுக்க திட்டமிடும் ட்ரம்ப்: கடும் அபாய நிலையிலா அமெரிக்கா? News Lankasri
உங்க படம் வந்தா தான் அது பொங்கல்... விஜய்யின் ஜனநாயகன் ரிலீஸ் தள்ளிப்போனது குறித்து பிரபலங்கள் வருத்தம் Cineulagam