வெலிகம பிரதேச சபைத் தலைவரை சுத்தப்படுத்திய முஜுபுர் ரஹ்மான் எம்.பி
படுகொலை செய்யப்பட்ட வெலிகம பிரதேச சபைத் தலைவர் லசந்த விக்ரமசேகர பல கொலைகளுடன் தொடர்புடையவர் என்றால் அவர் மீது ஏன் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜுபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்றையதினம் (23.10.2025) உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
“ஒரு வளர்ச்சியடைந்த மனித குளத்தில் ஒருவர் இறந்தால் அதற்கு முதலில் அஞ்சலி செலுத்த வேண்டும். அதை கூட செய்ய முடியாத அமைச்சர்களுடன் இந்த நாடாளுமன்றத்தில் இருப்பதில் நான் வெட்கப்படுகிறேன்.
வைராக்கியம்
அவர் பாதாள குழுத் தலைவர் என கூறி அவரை கொலை செய்தவர்களுக்கு சார்பாகவே பேசினீர்கள். அவர் பல குற்றங்களுக்கு சம்பந்தப்பட்டவர் என்றால் ஏன் சட்டப்படி நடவடிக்கை எடுக்கவில்லை?
அத்தோடு வெளிநாட்டில் கைது செய்யப்பட்டவர்களின் ஆயுதங்கள் அவரிடம் இருப்பதாக தெரிவித்தீர்கள். அவர் வெலிகம பிரதேச சபையின் தலைவராக பதியேற்று ஆறு மாதங்கள் கடந்து விட்டன.
அப்படியென்றால் அவரை கைது செய்து நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்திருக்கலாம். நீங்கள் வைராக்கியத்தில் பேசுகிறீர்கள். அவர் மரணமடைந்த பின்னர் ஏன் அவரின் குற்றப்பத்திரங்களை வெளியிட்டீர்கள்?
நீங்கள் இன்னும் 1988-1989ஆம் ஆண்டின் மனநிலையில் இருக்கின்றீர்கள். அரசாங்கம் அவரை கொலை செய்வதற்கான சூழலை அமைத்துக் கொடுத்துள்ளது. அரசு இதற்கு கட்டாயம் பொறுக் கூற வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



