ஜனாதிபதி நியமித்துள்ள குழு தொடர்பில் முஜிபுர் ரஹ்மான் அதிருப்தி
நாடாளுமன்ற உறுப்பினர்களின் சலுகைகள் தொடர்பில் ஆராய்வதற்காக குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளமை குறித்து ஐக்கிய மக்கள் சக்தியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் அதிருப்தி வெளியிட்டுள்ளார்.
தற்போதைய ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அவ்வாறான குழுவொன்றை நியமித்திருப்பது பயனற்ற செயலாகும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர்கள்
தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள முஜிபுர் ரஹ்மான், நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனுபவிக்கும் சலுகைகள் குறித்து ஆய்வு செய்ய குழுவை நியமிக்க வேண்டிய அவசியம் இல்லை. இது நிதி விரயமாகும் நடவடிக்கையாகும்.
அதற்கு பதிலாக அவர்களின் சலுகைகள் குறித்த அனைத்து தகவல்களையும் நாடாளுமன்ற பொதுச் செயலாளரிடம் இருந்து ஜனாதிபதி பெற்றுக்கொள்ளமுடியும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |