மன்னார் பிரதேச சபையின் தவிசாளராக மீண்டும் பொறுப்புக்களை ஏற்கும் முஹாஜிர் (Photo)

Charles Mannar Regional Council Zakul Kameed Mohammad Mujahir
By Independent Writer Nov 14, 2021 09:25 PM GMT
Independent Writer

Independent Writer

in அரசியல்
Report

மன்னார் பிரதேச சபையின் புதுக்குடியிருப்பு உறுப்பினராகவும்,சபையின் தவிசாளராகவும் இருந்து நீக்கப்பட்ட சாகுல் கமீது முகம்மது முஜாஹிர் (Zakul Kameed Mohammad Mujahir) மீண்டும் தனது பொறுப்புக்களை ஏற்கவுள்ளார்.

முன்னாள் வடமாகாண ஆளுநர் பி.ச.ம.சார்ள்ஸ் 2021.09.13 ஆம் திகதி வர்த்தமானி மூலம் அறிவித்தலுக்கு அமைவாக மன்னார் பிரதேச சபையின் தவிசாளர் சாகுல் கமீது முகம்மது முஜாஹிர் மன்னார் பிரதேச சபையின் தவிசாளர் என்ற வகையில் அப்பதவியில் பணிகள் மற்றும் கடமைகளை நிறைவேற்றும் போது குற்றங்களை புரிந்தமைக்காக போதுமான சாட்சியங்கள் இருப்பதாக தெரிவித்து தவிசாளர் மற்றும் சபை அங்கத்துவர் பதவிகளிலிருந்து நீக்கம் செய்யப்பட்டதாக வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து மீண்டும் முஜாஹிர் தனது பதவிகளை ஏற்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மன்னார் மாவட்டத்தில் மன்னார் பிரதேச சபைக்கான உள்ளுராட்சி மன்றத் தேர்தலானது கடந்த 09.03.2018 அன்று இடம்பெற்றது.

இத்தேர்தலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியானது பிரதேச சபைக்கான ஆட்சியை தன்வசம் கைப்பற்றியிருந்தது.

இதற்கமைய இப்பிரதேச சபைக்கான தவிசாளராக இக்கட்சியைச் சார்ந்த சாகுல் கமீது முகம்மது முஜாஹிர் புதுக்குடியிருப்பு வட்டாரத்துக்கு தெரிவு செய்யப்பட்டிருந்த நிலையில் இவர் மன்னார் பிரதேச சபையின் தவிசாளராகவும் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இந்த நிலையில்,முஜாஹிர் மன்னார் பிரதேச சபையின் 1987 ஆம் ஆண்டின் 15 ஆம் இலக்க பிரதேச சபைகள் சட்டத்தின் பிரிவு 185 (1) உப பிரிவில் குறிப்பிடப்பட்ட ஏற்பாடுகளுக்கமைய எவையேனும் தகுதியின்மைகள் உள்ளனவா என்பது பற்றி விசாரணை செய்து அறிக்கை சமர்ப்பிப்பதற்காக 1987 ஆம் ஆண்டின் 15 ஆம் இலக்க பிரதேச சபைகள் சட்டத்தின் பிரிவு 185 (2) ஆம் உப பிரிவுகளுக்கமைய நியமிக்கப்பட்ட ஓய்வுபெற்ற நீதி அலுவலர் கந்தையா அரியநாயகமின் கீழ் அமைக்கப்பட்ட தனிநபர் விசாரணை குழுவினால் விசாரணை செய்யப்பட்டு வாதத்தரப்பின் சாட்சியங்களைக் கவனத்திற் கொண்டதன் பின்பே இவர் தனது மன்னார் தவிசாளர் மற்றும் பிரதேச சபை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார் என்று முன்னாள் வடமாகாண ஆளுநர் திருமதி பி.ச.ம.சார்ள்ஸ் 2021.09.13 ந் திகதி வர்த்தமானி மூலம் அறிவித்திருந்தார்.

வட மாகாண ஆளுநரால் மன்னார் பிரதேச சபை தவிசாளர் நீக்கப்பட்டமையை ஆட்சேபித்து எஸ்.எச்.எம்.முஜாஹினால் கொழும்பு மேல் நீதிமன்றில் ரிட் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டிருந்த நிலையில் மன்னார் பிரதேச சபையின் புதிய தவிசாளர் தெரிவு புதன் கிழமை 29.09.2021 நடைபெற்றது.

அப்பொழுது அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி வசம் இருந்த மன்னார் பிரதேச சபை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி உறுப்பினர்களின் ஒத்துழைப்புடன் ஸ்ரீ லங்கா முஸ்லீம் காங்கிரஸ் கட்சி வசம் திரும்பியிருந்தது.

ஸ்ரீ லங்கா முஸ்லீம் காங்கிரஸ் கட்சியை சார்ந்த எருக்கலம்பிட்டி உறுப்பினர் எம்.ஐ.எம். இஸதீன் ஒரு வாக்கு வித்தியாசத்தால் மன்னார் பிரதேச சபை தவிசாளராக அப்பொழுது தெரிவு செய்யப்பட்டு இருந்தார்.

இந்த நிலையில் 1987 ஆம் ஆண்டின் 15 ஆம் இலக்க பிரதேச சபைகள் சட்டத்தின் பிரிவு 185 (3) (ஆ) ஆம் பிரிவின்படி விடயப் பொறுப்பு அமைச்சருக்கு உரித்தாக்கப்பட்டு 2018.10.24 ஆம் திகதி முதலாவது வட மாகாண சபை காலாவதியானதன் பேரில் இலங்கைச் சனநாயக சோசலிச குடியரசின் 1989 ஆம் ஆண்டின் 12 ஆம் இலக்க மாகாண சபை சட்டத்தின் 2 ஆம் பிரிவினூடாக எனக்கு உரித்தாக்கப்பட்டுள்ள அதிகாரத்தின் கீழ் வட மாகாண ஆளுநராகிய ஜீவன் தியாகராஜா ஆகிய நான் ஓய்வுபெற்ற நீதி அலுவலர் கந்தையா அரியநாயகமின் கீழ் அமைக்கப்பட்ட தனிநபர் விசாரணைக் குழுவின் அறிக்கையின் அடிப்படையில் சாகுல் ஹமீது முகம்மது முஜாஹிர்வை மன்னார் பிரதேச சபையின் தவிசாளர் மற்றும் உறுப்பினர் பதிவியிலிருந்து நீக்க தீர்மானித்து வெளியிடப்பட்ட 2021.09.13 ஆந் திகதிய வர்த்தமான அறிவித்தலை இரத்து செய்கின்றேன் என வட மாகாணம் ஆளுநர் ஜீவன் தியாகராஜா 2021.11.10 ந் திகதி புதன்கிழமை வர்த்தமானப் பத்திரிகையில் வெளியிட்டுள்ளார்.

இதைத் தொடர்ந்து சாகுல் கமீது முகம்மது முஜாஹிர் தனது பதவியை மீண்டும் திங்கள் கிழமை (15.11.2021) பொறுப்பேற்பார் என எதிர்பார்க்கப்படுகின்றது.  

Gallery
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், யாழ்ப்பாணம், கோயிலாக்கண்டி, Sevran, France

06 Jan, 2023
மரண அறிவித்தல்

சுதுமலை வடக்கு, கந்தர்மடம்

12 Jan, 2025
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, Leicester, United Kingdom

12 Jan, 2025
மரண அறிவித்தல்

காரைநகர், கொழும்பு, Toronto, Canada

09 Jan, 2025
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, Scarborough, Canada, Markham, Canada

09 Jan, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

விடத்தற்பளை, நுணாவில் கிழக்கு, கொழும்பு

13 Jan, 2020
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, Markham, Canada

13 Jan, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

பாண்டிருப்பு, காரைதீவு, மட்டக்களப்பு, London, United Kingdom

13 Jan, 2018
7ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை கிழக்கு, ஏழாலை

31 Dec, 2017
33ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம்

21 Dec, 1991
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வவுனிக்குளம், பேர்ண், Switzerland

06 Jan, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், Breda, Netherlands

16 Dec, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், Toronto, Canada

08 Jan, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, ஸ்கந்தபுரம்

04 Jan, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரவெட்டி, Manor Park, United Kingdom

13 Dec, 2024
மரண அறிவித்தல்

பூநகரி, கொழும்புத்துறை, புதுக்குடியிருப்பு

09 Jan, 2025
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வண்ணார்பண்ணை, பொலிகண்டி, London, United Kingdom

13 Dec, 2024
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, Montreal, Canada

11 Jan, 2018
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany

11 Jan, 2015
7ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, சூரிச், Switzerland

16 Dec, 2017
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் கிழக்கு, Markham, Canada

10 Jan, 2015
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சங்கத்தானை, மீசாலை கிழக்கு, Ottawa, Canada

13 Dec, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்லைப்பிட்டி 3ம் வட்டாரம், Jaffna, Ivry-sur-Seine, France

12 Jan, 2022
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நீராவியடி, நீர்வேலி, Torcy, France

05 Jan, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US