மூதூர் பிரதேச ஒருங்கிணைப்பு குழு கூட்டம்!
திருகோணமலை மாவட்ட மூதூர் பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் இன்று (16) மாலை பிரதேச செயலக மண்டபத்தில் இடம் பெற்றது.
குறித்த கூட்டமானது மூதூர் பிரதேச செயலாளர் எம்.பி.எம் முபாரக்கின் நெறியாழ்கையில் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் வெளிவிவகார மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதியமைச்சரும் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு தலைவருமான அருண் ஹேமச்சந்திரா தலைமையில் இடம்பெற்றது.
கூட்டம்
இதன்போது பல்வேறு அபிவிருத்தி திட்டங்கள் எதிர்கால அபிவிருத்தி நடவடிக்கைகள் நிறை குறைகள் என பல விடயங்கள் கலந்துரையாடப்பட்டன.
இதில் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகம் குகதாசன், மூதூர் பிரதேச சபை தவிசாளர்,பிரதேச சபை உறுப்பினர்கள்,திணைக்கள தலைவர்கள், பதவி நிலை உத்தியோகத்தர்கள், முப்படையினர் என பலரும் கலந்து கொண்டனர்.










ஊழல் ஒழிப்பு கோஷத்தை ஊளையிடுதல் ஆக்கிய ரணில்..! 6 மணி நேரம் முன்

30 லட்சம் இழப்பீடு பெற்ற செவிலியர்! பிரித்தானியாவில் கண்ணசைவுகளால் துன்புறுத்திய சக பெண் ஊழியர்! News Lankasri
