கிழக்கு மாகாணத்தில் முதலிடம் பெற்ற மூதூர் கல்வி வலயம்
கிழக்கு மாகாணத்தில் க.பொ.த உயர்தரப் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களின் அடிப்படையில் மூதூர் கல்வி வலயமானது முதலிடத்தில் தரப்படுத்தப்பட்டுள்ளது.
தற்போது வெளியாகியுள்ள 2022ம் ஆண்டு க.பொ.த உயர்தரப் பரீட்சையில் சித்தியடைந்தோர் வீதத்தின் அடிப்படையில் கிழக்கு மாகாணங்களில் உள்ள 17 கல்வி வலயங்கள் தரப்படுத்தப்பட்டுள்ளன.
சித்தியடைந்த மாணவர்கள்
இந்நிலையில் 617 மாணவர்கள் பரீட்சைக்குத் தோற்றியதில் 512 மாணவர்கள் சித்தியடைந்து 83 வீதமான சித்தியை பெற்று மூதூர் கல்வி வலயமானது முதலிடத்தினை பெற்றுள்ளது.
மேலும், 78.8 வீதமான சித்தியினைப் பெற்று கிண்ணியா வலயமானது இரண்டாம் இடத்திலும், 77.7 வீதமான சித்தியினைப் பெற்று மட்டக்களப்பு மேற்கு வலயமானது 3ம் இடத்திலும் தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.






நேருக்கு நேர் மோதவிருந்த விமானங்கள்: 300 அடி கீழ் நோக்கி பாய்ந்த விமானம்! திக் திக் நொடிகள்! News Lankasri

கடும் நிதி நெருக்கடிக்கு நடுவில்.., யுபிஎஸ்சி தேர்வில் தேர்ச்சி பெற்ற காய்கறி வியாபாரியின் மகள் News Lankasri
