அனோஜன் விவகாரம்! இலங்கையில் தமிழ் - முஸ்லிம் கலவரம் உருவாகுமென பரப்பப்படும் அச்சம் - உலமா கட்சி ஆதங்கம்

Sri Lankan Tamils Tamils S Shritharan Sivarasa Anojan
By Farook Sihan Sep 24, 2026 05:52 AM GMT
Report

சவூதி அரேபியாவில் தண்டனை விவகாரத்தை எதிர்கொண்டு வரும் சிவராசா அனோஜன் விடயத்தில், இலங்கையின் அரசியல்வாதிகள் எதைப் பேசுவது, எதைப் பேசக்கூடாது என்பதில் தவறி வருவதாக உலமா கட்சியின் தலைவர் முபாறக் அப்துல் மஜீத் சாடியுள்ளார்.

அனோஜன் விவகாரம் குறித்து ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.

அச்ச நிலை பரப்பல்

அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், இவ்விவகாரத்தில் சிறீதரன் எம்.பி பேசிய வார்த்தைகள் மிகவும் பாரதூரமானவை. அவர் ஒரு நாட்டின் சட்ட திட்டங்களைத் தெரிந்து பேசுகின்றாரா அல்லது மந்த நிலையில் பேசுகின்றாரா என்று தெரியவில்லை. அனோஜனுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டால் இலங்கையில் தமிழ் - முஸ்லிம் மக்களிடையே கலவரம் உண்டாகும் என அச்ச நிலையைப் பரப்பி வருகின்றனர்.

இது மிகவும் மோசமான செயற்பாடாகும். கடந்த காலங்களில் இலங்கையிலும் மரண தண்டனைகள் வழங்கப்பட்டிருக்கின்றன. சிறைச்சாலையில்கூட மரண தண்டனைக் கைதிகள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். அப்போதுகூட சிங்கள - தமிழ் மக்களிடையே கலவரம் வரவில்லை. அவ்வளவு நல்லதொரு நாடுதான் இலங்கை.

அனோஜன் விவகாரம்! இலங்கையில் தமிழ் - முஸ்லிம் கலவரம் உருவாகுமென பரப்பப்படும் அச்சம் - உலமா கட்சி ஆதங்கம் | Mubarak Abdul Majeed Statement

ஆனால், தமிழ் - முஸ்லிம் மக்களை வேண்டுமென்றே மோதவிடுவதற்காகத் தனது வக்கிர புத்தியுடன் இவர் இவ்வாறு கலவரம் ஏற்படும் எனக் குறிப்பிடுகின்றார். ஆகவே, அரசாங்கம் இவரது பேச்சுகள் குறித்துக் கவனம் செலுத்த வேண்டும். சமூக வலைத்தளங்களிலும் தொலைக்காட்சிகளிலும் நபிகள் நாயகம் மன்னிக்கும் குணம் கொண்டவர் எனப் பேசுகின்றனர்.

நிச்சயமாக நபிகள் நாயகம் மன்னிப்பின் சிகரம்தான், அவர் உயிருடன் இருந்திருந்தால் மன்னித்திருப்பார். ஆனால், இன்று நாட்டில் சட்டம் ஒன்று இருக்கின்றது. உதாரணமாக, பௌத்த நாடான இலங்கையில் கௌதம புத்தரை ஒருவர் விமர்சித்தால் அவர் மன்னிக்கப்படுவாரா? நிச்சயமாக இல்லை, அவர் சிறைத் தண்டனை அனுபவித்தே ஆக வேண்டும். உணர்ச்சிவசப்படுவதே இதற்கெல்லாம் காரணமாகும்.

சவூதி அரேபியாவுக்கும் இலங்கைக்கும் இடையே சிறந்த உறவு 

எனவே, இலங்கைகக்கும் சவூதி அரேபியாவுக்கும் இடையிலான இராஜதந்திர உறவைக் கெடுக்கும் வகையில் அரசியல்வாதிகள் பேசக் கூடாது. தற்போது சவூதி அரேபியாவுக்கும் இலங்கைக்கும் இடையே சிறந்த உறவு காணப்படுகின்றது. ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவின் ஆட்சி குறித்து சவூதி அரேபியாவிற்கு நல்ல அபிப்பிராயம் ஏற்பட்டுள்ளது. அதனை எவரும் கெடுத்துவிடக் கூடாது.

அனோஜன் விவகாரம்! இலங்கையில் தமிழ் - முஸ்லிம் கலவரம் உருவாகுமென பரப்பப்படும் அச்சம் - உலமா கட்சி ஆதங்கம் | Mubarak Abdul Majeed Statement

பல வருடங்கள் சவூதியில் வாழ்ந்தவன் என்ற ரீதியில் கூறுகின்றேன்; அது சாதாரண நாடல்ல, அங்கு ஆர்ப்பாட்டங்கள் செய்ய முடியாது. அந்த நாட்டிற்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்வதை அந்நாடு விரும்புமா என்பதை யோசிக்க வேண்டும். இப்பிரச்சினைக்குக் கருணை மனுக்கள் மூலமே தீர்வு காண முடியுமே தவிர, ஆர்ப்பாட்டங்களாலோ கவனயீர்ப்புப் போராட்டங்களாலோ பலனில்லை.

அனோஜன் செய்தது சாதாரண குற்றமல்ல, முழு முஸ்லிம்களையும் காயப்படுத்திய குற்றமாகும். இருப்பினும், எமது நாட்டுப் பிரஜையான அனோஜன் பாதுகாப்பாக நாட்டிற்குத் திரும்பி வர வேண்டும் என்பதையே நாங்களும் விரும்புகின்றோம் எனத் தெரிவித்தார். 

இலங்கைக்கு அழைத்து வரப்படுவாரா சாரா..! கைச்சாத்திடப்பட்ட ஒப்பந்தம் குறித்து கேள்வி

இலங்கைக்கு அழைத்து வரப்படுவாரா சாரா..! கைச்சாத்திடப்பட்ட ஒப்பந்தம் குறித்து கேள்வி

ராஜபக்சர்களின் மற்றுமொரு மோசடி அம்பலம் - காட்டிக் கொடுத்தார் கோட்டாபய

ராஜபக்சர்களின் மற்றுமொரு மோசடி அம்பலம் - காட்டிக் கொடுத்தார் கோட்டாபய

மரண அறிவித்தல்

அனலைதீவு, நீர்கொழும்பு, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, Mississauga, Canada

07 Nov, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நியூ யோர்க், United States

08 Nov, 2018
13ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கொழும்பு

10 Nov, 2013
16ம் ஆண்டு நினைவஞ்சலி
39ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Northeim, Germany, Birmingham, United Kingdom

28 Oct, 2026
நன்றி நவிலல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கொழும்பு

08 Nov, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், கொழும்பு, Chelles, France

08 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, இளவாலை, Scarborough, Canada

07 Nov, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புதுக்குடியிருப்பு

07 Nov, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அராலி மேற்கு வட்டுகோட்டை, வேலணை 5ம் வட்டாரம், புத்தளம், Bergisch Gladbach, Germany

21 Oct, 2025
மரண அறிவித்தல்

சில்லாலை, கொழும்பு, நீர்கொழும்பு, London, United Kingdom

21 Oct, 2026
நன்றி நவிலல்

ஹட்டன், நோர்வூட், கொட்டகலை, கொழும்பு

02 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், வவுனியா

06 Nov, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், Villepreux, France

04 Nov, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, St. Gallen, Switzerland

26 Oct, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பர்மா, Burma, யாழ்ப்பாணம், கொழும்பு, Minnesota, United States, நியூ யோர்க், United States

05 Nov, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொழும்பு

08 Nov, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Zürich, Switzerland

03 Nov, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

26 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US