மக்களின் அசமந்தப் போக்கால் தண்ணீரூற்று சீ.சீ.தமிழ்க் கலவன் பாடசாலையின் தற்போதைய நிலை(Photos)
தண்ணீரூற்று சீ.சீ.தமிழ்க் கலவன் பாடசாலையின் சுற்றுச் சூழல் கழிவுகளால் நிறைந்துள்ளதுள்ள ஒரு துர்பாக்கிய நிலையை எதிர்கொண்டுள்ளது.
மு/தண்ணீரூற்று இலங்கைச் திருச்சபை தமிழ் கலவன் பாடசாலையானது, முல்லைத்தீவு மாவட்டத்தின் தண்ணீரூற்றில், மாங்குளம் - முல்லைத்தீவு பிரதான வீதியில் அமைந்துள்ளது.
தரம் - 5 வரையான வகுப்புக்களை கொண்டுள்ளமையால் சிறுவர்களுக்கான பாடசாலையாக இது செயற்படுகின்றது.
மாரி கால மழையின் ஆரம்பம் என்பதால் கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையினால் பாடசாலையின் பிரதான வாயிலும் அதனைச் சூழவுள்ள இடங்களிலும் வெள்ள நீர் தேங்கி பின் வடிந்தோடியுள்ளது.
குவிந்து கிடக்கும் பிளாஸ்டிக் கழிவு
வீதியின் ஓரங்களில் வீசப்படும் பிளாஸ்ரிக் போத்தல்கள் மற்றும் குப்பைகளை வெள்ள நீர் அள்ளிக்கொண்டு பள்ளம் நோக்கிப் செல்கிறது.
வெள்ள நீரோட்டத்தின் பாதையில் பாடசாலைச் சுற்றாடலும் ஒரு அங்கமாக அமைந்து விடுவதால், பாடசாலைச் சூழலில் இவை விடுபட்டுச் செல்லும் போது அந்த சூழல் தன் அழகை இழந்துவிடுகின்றது.
சிறுவர்களின் உலகமாக ஆரம்ப பாடசாலைகள் அமைந்து விடுகின்றன. அவற்றின் சுற்றுச்சூழலை பாதுகாப்பாகவும் அழகிய கவர்ச்சிகரமான தன்மையோடும் பேணுவதனால் ஆரோக்கியமான சமூகத்தை உருவாக்கி விடலாம் என ஆசிரியை ஒருவர் குறிப்பிட்டார்.
சேரும் பிளாஸ்டிக் உள்ளிட்ட கழிவுகளை இப்போது அகற்றி சூழலை சுத்தம் செய்தாலும் இவ்வாறு கழிவுப் பொருட்களை வெள்ள நீர் கொண்டு செல்லாதவாறு முகாமை செய்வதால் நேரமும் மீதமாகும் அதே வேளை சூழலும் சுத்தமாகும் என தன் மகனை பாடசாலைக்கு கொண்டுவந்து விட்டுச் செல்லும் மற்றொரு அரச அலுவலர் கருத்துரைத்தார்.
நந்திக்கடலில் கலக்கும் வெள்ள நீர்ரோட்டம்
தண்ணீரூற்று சீ.சீ.த.க.பாடசாலையின் அமைவிடத்தைச் சூழவுள்ள பகுதிகள் சாய்வான தரையை கொண்டமைந்துள்ளன.
இரு பிராதான போக்குவரத்துப் பாதைகளையும், பாதைகளில் வியாபார நிலையங்களையும் கொண்டமைந்ததுள்ளது.
முன் பிரதான வாயிலானது மாங்குளம் முல்லைத்தீவு பிரதான வீதியிலும் பாடசாலையின் மற்றொரு பக்கம் குமுழமுனை தண்ணீரூற்று வீதியாலும் எல்லைப்படுத்தப்பட குறித்த பாடசாலையின் பிற்புறம் அதீக நீர் தேங்கி நிற்கும் தாழ்வான நிலத்தையும் கொண்டுள்ளது.
இங்கே சேரும் வெள்ள நீர் வடிந்து ஊற்றங்கரை வெளி நீரேந்து பகுதியால் நந்திக் கடலில் கலக்கின்றது.
உயர்வான இடங்களில் இருந்து ஓடி வரும் மழை வெள்ள நீருடன் பிளாஸ்ரிக் போத்தல்கள் மற்றும் தகரப் பேணிகள், என ஏராளமான உக்காத கழிவுகள் அடித்துச் செல்லப்படுகின்றன.
இவை இடையிடையே தேங்குவதாலும் நீர் நிலைகளில் தேங்குவதாலும் மண்ணில் நீரோட்டத்தின் திசையில் பாதிப்பேற்படுவதோடு தாவரங்களுக்கு பொதுவாக இயற்கை மண்ணமைப்பு பொருத்தமற்றதாக மாறிவிடும் அபாயம் இருப்பதாக விவசாயத்துறை போதனாசிரியர் ஒராவருடனான உரையாடல் மூலம் அறிய முடிந்தது.
வீதிகளைப் பயன்படுத்துவோருக்கான வேண்டுகோள்
வீதிகளைப் பயன்படுத்துவோரை பயனிகள் என்போம்.வீதிகள் என்பது வரையறையற்ற இயல்புகளையுடைய மக்களை பயனிக்க அனுமதிக்கின்றது.
பலரும் பயன்படுத்தும் வீதிகளை சுத்தமாகவும் அழகாகவும் பேணுதல் வேண்டும். அப்படி பேணும் போது பயனிகள் பயன்படுத்தும் பொருட்களினால் தோன்றும் கழிவுகளை உரிய முறையில் முகாமை செய்து அகற்றிவிடல் வேண்டும்.
வீதிகளில் உள்ள குப்பைக் கூடையில் தங்கள் கழிவுகளை போட்டு செல்வதானது வரவேற்கத்தக்கது.
இந்த முயற்சியின் வெற்றி இது போன்ற வெள்ள நீருடன் பிளாஸ்ரிக் கழிவுகள் பொதுமக்கள் வாழும் இடங்களில் தோன்றாது என்பது பொறுப்புடைய அறிவுடமையாகும்.