நுவரெலியாவில் புது வருட விடுமுறையை கழிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள்
ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்களில் பலர் புது வருட விடுமுறையை கழிப்பதற்காக நுவரெலியாவுக்கு சென்றுள்ளதாக தெரியவருகிறது.
விடுமுறையை கழிப்பதற்காக சென்றுள்ள இவர்கள் நுவரெலியாவில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர் பங்களாவில் உள்ள அறைகளை முன்பதிவு செய்திருந்தனர்.
பங்களாவில் உள்ள அனைத்து அறைகளிலும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்கியிருப்பதாக நாடாளுமன்றத்தின் உறுப்பினர்கள் சேவை பிரிவு தெரிவித்துள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மட்டுமே ஒதுக்கப்படும் பங்களா
நுவரெலியாவில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர் பங்களா, நாடாளுமன்ற உறுப்பினர்களின் பயன்பாட்டுக்கு மாத்திரமே ஒதுக்கப்பட்டுள்ளது.
இங்கு தங்கியிருக்கவும் சாப்பிடவும் மிக குறைவான கட்டணமே இவர்களிடம் அறவிடப்படுகிறது. ஜெனரல்ஸ் ஹவுஸ் என அழைக்கப்படும் இந்த பங்களா ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் அதன் பிரதானிகள் தங்குவதற்காக நிர்மாணிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
பங்களாவில் அமானுஷ்ய சம்பவங்கள் நடப்பதாக கூறப்படுகிறது
ஜெனரல்ஸ் ஹவுஸ் என அழைக்கப்படும் இந்த பங்களாவில் அமானுஷ்ய சம்பவங்கள் நடப்பதாகவும் கூறப்படுகிறது.
ஆங்கிலேயர் காலத்தில் ஆங்கிலேய பெண்ணொருவர் பங்களாவில் உள்ள ஒரு அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டதாக பேசப்படுகிறது. அந்த பெண்ணின் ஆவி இந்த பங்களாவில் உலாவி வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
ஒரு முறை இந்த பங்களாவில் உள்ள அறை ஒன்றில் தங்கியிருந்த தற்போதைய ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார, நடு இரவில் கழிவறைக்கு சென்று திரும்பிய போது தன்னை யாரோ தள்ளி விட்டது போல் உணர்ந்தாகவும் கீழே விழுந்து காயம் ஏற்பட்டதாகவும் அப்போது ஊடகங்களிடம் கூறியிருந்தார்.





வெற்றிக்கு பின்.., பாகிஸ்தான் வீரர்களுக்கு கைகுலுக்காமல் ட்ரஸ்ஸிங் ரூம் கதவுகளை மூடிய இந்திய வீரர்கள் News Lankasri
