வரியற்ற வாகன அனுமதிகளை கோரிய நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெயர்களை வெளியிடவேண்டும் - ஜேவிபி கோரிக்கை
82 நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாகன அனுமதிப்பத்திரத்தை கோரியுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
இந்த நடவடிக்கையை நிறுத்துவதற்கு சாத்தியமான நடவடிக்கைகளை தாம் எடுப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
சபாநாயகரிடம் கோரிக்கை
தேசிய மக்கள் சக்தி, வாகன அனுமதிப்பத்திரங்களை பெற்றுக்கொள்ளாது என்று குறிப்பிட்ட அவர்,நாடு முழுவதும் வாகன அனுமதிப்பத்திரம் இடைநிறுத்தப்பட்டுள்ள நிலையில், வாகன அனுமதிப்பத்திரம் கோரிய நாடாளுமன்ற உறுப்பினர்களின் பட்டியலை வெளியிடுமாறு சபாநாயகரிடம் கோரிக்கை விடுக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

மக்களுக்கு சிறந்த வாழ்க்கையையும் நல்லாட்சியையும் எதிர்பார்க்கும் தாம் உண்மைக்கும் பொய்க்கும் உள்ள வேறுபாட்டை வெளிப்படுத்த முயற்சிப்பதாக அவர் கூறியுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
ஈழத் தமிழர்களின் விடுதலைக்கான பாதையை யார் வழிநடத்துவது.. 17 மணி நேரம் முன்
ஆளுங்கட்சிக்கு மரண அடி கொடுத்துள்ள தேர்தல் முடிவுகள்: பிரதமர் ராஜினாமா செய்ய வலியுறுத்தல் News Lankasri
அந்த நடிகை வெளியிட்ட போட்டோ.. எனக்கும் என் குழந்தைகளுக்கும் அவமானம்: விஜய் மீது சங்கீதா அடுக்கடுக்கான புகார் Cineulagam
ட்ரம்ப் எந்த நேரத்திலும் முடிவெடுக்கலாம்... ஈரானில் இருந்து தூதரக அதிகாரிகளை வெளியேற்றிய பிரித்தானியா News Lankasri
விஜய்க்கு நடிகை உடன் தொடர்பு.. 2021ல் தொடங்கிய சண்டை! விவாகரத்து மனுவில் சங்கீதா குறிப்பிட்ட அதிர்ச்சி தகவல் Cineulagam