ஈரானில் விபத்து நடந்த இடத்தில் இருந்து உடல்களை மீட்கும் மீட்பு குழுவினர்
ஈரான் (Iran) உலங்கு வானூர்தி விபத்தில் பலியானவர்களின் உடல்களை விபத்து நடந்த இடத்தில் இருந்து அந்நாட்டு மீட்பு குழுவினர் மீட்டு வருகின்றனர்.
ஈரானின் எட்டாவது ஜனாதிபதியான இப்ராஹிம் ரைசி (Ebrahim Raizi), கிழக்கு அஜர்பைஜானின் வடமேற்கு மாகாணத்தில் உள்ள வர்சகான் பகுதியில் நேற்று (20.05.2024) நடந்த உலங்கு வானூர்தி விபத்தில் உயிரிழந்தார்.
விபத்திற்குள்ளான உலங்கு வானூர்தியில் இப்ராஹிம் ரைசியுடன் ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சர் ஹொசைன் அமீர் அப்துல்லாஹியன், தளபதி மஹ்தி மூஸவி, ஈரானின் கிழக்கு அஜர்பைஜான் மாகாண ஆளுனர் மாலிக் ரஹ்மதி ஆகியோரும் பயணித்துள்ளனர்.
மோசமான வானிலை
அஜர்பைஜானில் குடாஃபரின் அணையை திறந்து வைப்பதற்காக சென்று திரும்பும் போதே இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், மோசமான வானிலையிலும் ஒரு மணி நேரம் தேடுதலுக்குப் பிறகு மீட்புப் படையினர் விபத்து நடந்த இடத்தைக் கண்டுபிடித்து உடல்களை மீட்டு வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |