ஒருபால் திருமணம் குறித்து அரசியல்வாதிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
ஒருபால் திருமணங்களை அங்கீகரிக்கும் சட்டத்தை நிறைவேற்றக் கூடாது என பெங்கமுவே நாலக்க தேரர் எச்சரிக்க விடுத்துள்ளார்.
நாடாளுமன்றில் இந்த சட்டத்தை நிறைவேற்றியதன் பின்னர் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஊர்களுக்கு செல்ல முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அகில இலங்கை பௌத்த காங்கிரஸ் உள்ளிட்ட சிங்கள பௌத்த தேசியவாத அமைப்புக்கள் இந்த சட்டத்தை எதிர்ப்பதாகத் தெரிவித்துள்ளார்.
பாரிய பாதிப்பு
தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்,
சட்டமூலம் நிறைவேற்றப்பட்டால் தேர்தலுக்காக ஆசி வேண்டி அரசியல்வாதிகள் வரக்கூடாது. மேலும், இந்த சட்டம் நாடாளுமன்றில் நிறைவேற்றப்படக் கூடாது
தவறுதலாகவேனும் சட்டம் நிறைவேற்றப்பட்டால் அது இலங்கை கலாச்சாரத்திலும் குடும்ப கட்டமைப்பிலும் பாரிய பாதிப்பினை ஏற்படுத்தும்.
சமயங்கள் அங்கீகரிக்கவில்லை
ஒரு பால் திருமணங்களை எந்தவொரு சமயமும் அங்கீகரிக்கவில்லை.
மேற்குலக நாடுகளில் பல்வகைத் தன்மையுடைய கலாச்சாரங்களில் ஒருபால் திருமணங்கள் அங்கீகரிக்கப்பட்டாலும் அதனை இலங்கையில் பின்பற்றத் தேவையில்லை.
பெளத்த கொள்கைகளுடன் கூடிய எமது கலாச்சாரத்திற்கு இந்த ஒருபால் திருமணங்கள் பொருத்தமற்றது.
அத்தோடு, யாருடைய தேவைக்காக இந்த சட்டம் நிறைவேற்றப்படுகின்றது என்ற சந்தேகம் எழுகிறது.
வெளிநாட்டு சக்திகள் அல்லது அரசாங்கத்தின் பலம்பொருந்தியவர்களினால் இந்த சட்டம் நிறைவேற்ற முயற்சிக்கப்படலாம்.” என அவர் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |