இரட்டைவேடம் போட்டு மக்களை ஏமாற்றும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி : இரா.சாணக்கியன்
இரட்டைவேடம் போட்டுக் கொண்டு மட்டக்களப்பு மாவட்ட மக்களை இன்னும் ஏமாற்ற முடியும் என்ற வகையில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி செயற்படுவதாக மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
அமைச்சர் டக்ளஸ் போன்று பிள்ளையான் முதுகெழும்பு உள்ளவரா எனவும் அவர் கேள்வியெழுப்பியுள்ளார்.
இன்று (26.01.2023) மட்டக்களப்பு களுவாஞ்சிகுடியில் உள்ள அவரது அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இதனை தெரிவித்துள்ளார்.
இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர்,
படகு சின்னத்தில் பொதுஜன பெரமுன போட்டி
இலங்கை தமிழரசுக்கட்சி அனைத்து சபைகளிலும் ஆட்சியமைக்கும். அனைத்து பகுதிகளிலும் தமிழரசுக்கட்சிகான ஆதரவு தளம் என்பது அதிகரித்துள்ளது.
முன்னாள் அமைச்சரும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளருமான பசில் ராஜபக்ச அவர்கள் யாழில் வீணைச்சின்னத்திலும் கிழக்கில் மட்டக்களப்பில் படகு சின்னத்திலும் பொதுஜன பெரமுன போட்டியிடுவதாக தெரிவித்திருந்தார்.
படகு என்பது மட்டக்களப்பு மாவட்டத்தில் மொட்டின் முகவராகவே உள்ளது என்பதை நாங்கள் கடந்த காலத்திலிருந்து தெரிவித்து வருகின்றோம்.
பொதுஜன பெரமுனவின் மாவட்ட அமைப்பாளர் சந்திரகுமார் என்பவர் மூன்று பகுதிகளில்
போட்டியிடப்போவதாக தெரிவித்திருந்த செய்தி வெளிவந்திருந்தது.
ஆனால் வேட்பு மனுக்கான கட்டுப்பணத்தினை அவர் செலுத்தியிருந்த போதிலும் அவர்கள் வேட்பு மனு தாக்கல் செய்தது தொடர்பில் அறிவிக்கப்படவில்லை. அப்போதே சந்தேகம் தெரிவிக்கப்பட்டது.
அன்று எழுந்த சந்தேகங்கள் அனைத்தையும் பசில் ராஜபக்ச அவர்கள் படகு கட்சியின் ஊடாகத்தான் பொதுஜன பெரமுன கட்சி போட்டியிடுகின்றது என்பதை உறுதியாக தெரிவித்துள்ளார்.
நாட்டினை நாசமாக்கிய பொதுஜன பெரமுன கட்சி
2019ஆம் ஆண்டிலிருந்து இந்த நாட்டினை நாசமாக்கிய பொதுஜன பெரமுன கட்சி நாட்டின் விவசாயிகளை நடுத்தெருவில் கொண்டு வந்து விட்ட கட்சி எரிபொருள் தட்டுப்பாட்டை நாட்டில் ஏற்படுத்தியவர்கள்.
எங்களது பிரதேசத்திலிருந்த மண் வளங்களை கொள்ளையிட்டவர்கள் இந்த பொதுஜன பெரமுனவினை சோர்ந்தவர்கள்.
பொதுஜன பெரமுனவில் போட்டியிடுவது என்றால் அதனை தைரியமாக சொல்லுங்கள்.
கட்சியின் செயலாளர் சொல்கின்றார் தனித்து படகில் போட்டியிடுகின்றோம் என்று ஆனால் எஜமான பசில் ராஜபக்ச மொட்டு படகில் போட்டிபோடுகின்றது என்று கூறுகின்றார்.
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா போன்று துணிவுடன் நில்லுங்கள். ஒரு முதுகெலும்பு உள்ளவராகயிருங்கள். டக்ளஸ் தேவானந்தா தாங்கள் பொதுஜன பெரமுன கட்சி என்று தைரியமாக ஏற்றுக்கொள்கின்றார்.
இரட்டைவேடம்
ஆனால் நீங்கள் மட்டும் இங்கு இரட்டைவேடம் போடுகின்றீர்கள்.
மட்டக்களப்பு மாவட்ட மக்களை தொடர்ந்து ஏமாற்ற முடியும் என்று நினைக்கின்றீர்களா?. மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி எங்களுக்கு போட்டியில்லை.
ஆனால் மாவட்ட மக்களை தொடர்ந்த நீங்கள் ஏமாற்றமுடியாது.
நேற்றைய தினம் வாழைச்சேனை பிரதேசசபையினை தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி இழந்துள்ளது. இது முதலாவது அடியாகும்.
நாங்கள் நினைத்திருந்தால் வாகரையினையும் கைப்பற்றியிருப்போம். ஆனால் அந்த மக்களால் நீங்கள் துரத்தியடிக்கப்பட வேண்டும் என்பதற்காக விட்டிருக்கின்றோம்.
வட்டாரங்களில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியினர் பிச்சையெடுப்பது போன்று வேட்பாளர்களை தேடி அலைகின்றனர் எனத் தெரிவித்துள்ளார்.
![தான் படிக்க வைத்த பெண்ணே தனக்கு அதிகாரியாக எஸ்ஐ சீருடையில் வந்து நின்றதால் இன்ப அதிர்ச்சியான காவலர்](https://cdn.ibcstack.com/article/e263aa7f-96be-4fdd-b622-39e30e84291e/25-67a6deb6b5243-sm.webp)
தான் படிக்க வைத்த பெண்ணே தனக்கு அதிகாரியாக எஸ்ஐ சீருடையில் வந்து நின்றதால் இன்ப அதிர்ச்சியான காவலர் News Lankasri
![UPSC தேர்வில் 5 முறை தோல்வியடைந்து 6-வது முயற்சியில் ஐஏஎஸ் அதிகாரியான பெண்.., யார் இவர்?](https://cdn.ibcstack.com/article/850f5751-af13-48d0-a452-7c3f77ee6692/25-67a6f9ece2bbb-sm.webp)
UPSC தேர்வில் 5 முறை தோல்வியடைந்து 6-வது முயற்சியில் ஐஏஎஸ் அதிகாரியான பெண்.., யார் இவர்? News Lankasri
![உலகின் மிகப்பெரும் கோடீஸ்வரர் எலோன் மஸ்கின் கல்வித் தகுதி: அவரின் மொத்த சொத்து மதிப்பு](https://cdn.ibcstack.com/article/b28aebf7-031c-4649-a714-366de4ef4c77/25-67a725ed56630-sm.webp)