ஜனாதிபதி ஆவதற்கு அநுர மேற்கொண்ட யுத்தி.. முன்வைக்கப்பட்டுள்ள பகிரங்க குற்றச்சாட்டு
தேர்தல் காலத்தில் தேசிய மக்கள் சக்தி மற்றும் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க ஆகியோர் பொதுமக்களைத் தவறாக வழிநடத்தியதாக முன்னாள் அமைச்சர் எஸ். எம். மரிக்கார் குற்றம் சாட்டியுள்ளார்.
அரசாங்கம் குறித்து ஏற்கனவே இதேபோன்ற கருத்துக்களைத் தெரிவித்துள்ள அவர், அண்மையில் சமூக ஊடகங்களின் பயன்பாடு மற்றும் அரசியல் பிரசாரம் குறித்தும் கருத்து வெளியிட்டுள்ளார்.
நேர்காணல் ஒன்றில் பேசிய அவர், தேசிய மக்கள் சக்தியால் மக்கள் வெறும் ஏமாற்றத்திற்கு உள்ளாக்கப்படவில்லை என்றும், மாறாக அக்கட்சி மக்கள் மீது திட்டமிட்டதொரு மோசடியை மேற்கொண்டது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
அரசியல் பிரசாரம்
தேர்தல் பிரசாரத்திற்காகச் சமூக ஊடகங்கள் பயன்படுத்தப்பட்ட விதம் குறித்தும் அவர் கருத்துத் தெரிவித்தார்.

மேலும், "நடுத்தர வயதுப் பெண்கள் 'டிக்டொக்' (TikTok) போன்ற தளங்களையும், முதிய பெண்கள் 'யூடியூப்' (YouTube) தளத்தையும் பயன்படுத்தும் தற்போதைய போக்கைக் கருத்தில் கொண்டு, தேர்தல் பிரசாரத்திற்கு இத்தளங்கள் எவ்வாறு பயன்படுத்தப்பட்டன என்பது குறித்து ஆராயப்பட வேண்டும்.
'யூடியூப்' உள்ளிட்ட சமூக ஊடகத் தளங்களில் மேற்கொள்ளப்படும் அரசியல் பிரசாரம் குறித்து 2021இலேயே தனது கட்சி உறுப்பினர்களுக்குத் தான் அறிவுறுத்தியிருந்தது.
வெவ்வேறு காலகட்டங்களில் சமூக ஊடகங்களில் - குறிப்பாக 'டிக்டொக்' தளத்தில் - வெளியிடப்பட்ட பல்வேறு கருத்துக்கள் மூலம் மக்களின் கவனம் ஈர்க்கப்பட்டது, இத்தகைய காணொளிகள் குறித்துக் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியது அவசியம்” என குறிப்பிட்டுள்ளார்.
T20 போட்டியில் 188 ஓட்டங்கள் விளாசிய பிரிட்டோரியஸ்; கெயிலின் 13 வருட சாதனை முறியடிப்பு News Lankasri