அதிரப்போகும் நீதிமன்றங்கள்! இலங்கை அரசியலில் அடுத்த கட்ட பரபரப்பு
ஒக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் இலங்கையின் பல நீதிமன்றங்களில் முன்னாள் அமைச்சர்கள் மற்றும் முக்கிய அரசியல் பிரமுகர்கள் தொடர்பான பல வழக்குகள் விசாரணைக்கு வரவுள்ளன.
இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகள், பணச் சலவை குற்றச்சாட்டு தொடர்பான வழக்குகள், அரச நிதி மற்றும் அரச வளங்களைப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் வழக்குகள், சொத்து தொடர்பான வழக்குகள், தேர்தல் கால வன்முறை தொடர்பான வழக்குகள் போன்ற பல்வேறு வழக்குகள் தான் இந்த அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட உள்ளன.
நாமல் ராஜபக்ச, பசில் ராஜபக்ச, ரணில் விக்ரமசிங்க, விமல் வீரவன்ச, பிரசன்ன ரணதுங்க, ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, பிள்ளையான் உள்ளிட்ட பல அரசியல் பிரமுகர்கள் தொடர்பான வழக்குகளுக்கு முக்கிய நீதிமன்றத் திகதிகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.
ஒரே மாதத்தில் பல அரசியல் பிமுகர்கள் தொடர்பான வழக்குகள் நீதிமன்றங்களில் இடம்பெறுவது அரசியல் மற்றும் சட்டரீதியான கவனத்தை ஈர்க்கும் ஒரு விடயமாக பார்க்கப்படுகின்றது.
இந்தநிலையிலே, ஒக்டோபர் மாதம் மிக முக்கியமான தீர்மானம் மிக்க மாதமாக இந்த அரசியல்வாதிகளுக்கு அமையப்போகின்றதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஒக்டோபர் முதல் நவம்பர் வரை எந்த அரசியல் பிரமுகருக்கு எந்த வழக்கு, எந்த நீதிமன்றத்தில் விசாரணை, முக்கிய நீதிமன்றத் திகதிகள் எவை, அடுத்தகட்டத்தில் என்ன நடக்கலாம் என்பது தொடர்பான விரிவான தகவல்களை நியுஸ் இன்சைட் நிகழ்ச்சியில் காணலாம்.