நாடாளுமன்றத்தில் அதிகரிக்கும் நகைச்சுவை செயற்பாடு குறித்து எழுந்துள்ள விமர்சனம்
நாடாளுமன்றத்தில் மூன்று நான்கு பேர் செய்யும் கேலிக்கூத்துகளால் ஒட்டுமொத்த நாடாளுமன்றமும் ஜோக்கர்களின் கூடாரமாகி விடுவதாக துஷார இந்துனில் எம்.பி. விமர்சித்துள்ளார்.
நாடாளுமன்ற அமர்வில் நேற்றையதினம் (22.06.2023) கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இது குறித்து மேலும் தெரிவித்தாவது , ''நாடாளுமன்றத்தில் இருக்கும் மூன்று, நான்கு பேர் செய்யும் கேலிக்கூத்துகளால் இங்குள்ள 225 பேரும் ஜோக்கர்களின் நிலைக்குத் தள்ளப்பட்டு விடுவார்கள்.
விமர்சன அதிகரிப்புக்கள்
ஏனெனில் சர்வதேச யோகா தினத்தன்று அமைச்சர்கள் சிலர் களத்தில் இறங்கி யோகா பயிற்சி செய்வதை கண்டேன். இந்நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீதான மாியாதை குறைந்து விமர்சனம் அதிகரித்துக் கொண்டிருக்கும்.
மேலும் அவ்வாறான கூத்துகள், வெறும் கேலிக்கூத்தாகி, நாடாளுமன்றத்தில் இருக்கும் அனைவரின் மரியாதையும் கெட்டுவிடும்.
செல்லுலாய்டு பொம்மைகள் போன்று காணப்படும் ஒரு சிலரால் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் அவமானத்தை சந்திக்க நேர்ந்துள்ளது" என்றும் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |





அரசாங்கத்திற்கு நெருக்கடியை கொடுத்துள்ள செம்மணி மனிதப் புதைகுழி! 13 மணி நேரம் முன்

புலம்பெயர்தல் எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் செய்த வேடிக்கை செயல்: கமெராவில் சிக்கிய காட்சி News Lankasri
