ரிஷாட் எம்.பி மற்றும் அமெரிக்க தூதுவர் இடையே முக்கிய சந்திப்பு!
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் (Rishad Bathiudeen), இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜுலி சாங்கை (Julie Chang) சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
குறித்த கலந்துரையாடலானது இன்று (26) கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகத்தில் இடம்பெற்றுள்ளது.
இதன்போது, சமகால அரசியல் விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடியதாக ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் ஆதரவு
இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது, "இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவருடன், எமது நீண்டகால தொடர்புகள் மற்றும் நிலைபேறான தன்மை குறித்து ஆக்கபூர்வமான கலந்துரையாடலொன்று இடம்பெற்றது.
இதன்போது, புனித ரமலான் மாதத்தில், காசா மக்கள் எதிர்கொண்டுள்ள பெரும் துயரங்கள் மற்றும் உயிரிழப்புக்கள் தொடர்பிலும் எமது ஆழ்ந்த கவலையை தூதுவரிடம் வெளிப்படுத்தினோம்.
மேலும், மனிதாபிமான விடயங்களை முன்னிறுத்தியும் உலக அமைதிக்காகவும் அமெரிக்கா தனது ஆதரவினை வழங்க வேண்டும்" எனவும் அவர் வலியுறுத்தியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

பட்டலந்த இடிமுழக்கம் மழையைத் தராது 6 நாட்கள் முன்

Super Singer: சூப்பர் சிங்கரில் நடுவர்களை நடுநடுங்க வைத்த சம்பவம்... அட்டகாசமான ப்ரொமோ காட்சி Manithan

அதிர்ச்சியின் உச்சத்தில் இருக்கும் ஆனந்திக்கு ஏற்பட்ட ஆபத்து... பரபரப்பான சிங்கப்பெண்ணே புரொமோ Cineulagam
