அர்ச்சுனாவால் மீண்டும் சர்ச்சை! தகாத வார்த்தைகளால் இளங்குமரனுக்கு அர்ச்சனை
யாழ். ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நேற்றையதினம்(25) ஆரம்பிக்கப்பட் நிலையில் பாதியில் இடைநிறுத்தப்பட்டிருந்தது.
கூட்டத்தில் கலந்து கொண்ட யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா உள்ளிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களிடையே ஏற்பட்ட குழப்ப நிலை காரணமாக கூட்டம் இடைநிறுத்தப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையே ஏற்பட்ட வாய்த்தர்க்கம் முற்றி கடும் குழப்ப நிலை ஏற்பட்டதை அடுத்து, கூட்டத்தின் தலைவர் அமைச்சர் சந்திரசேகரனால் அதனை கட்டுப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது.
இதனால் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனும் பாதியிலே கூட்டத்தை விட்டு வெளியேறியிருந்தார்.
இந்தநிலையில் கூட்டத்தில் என்ன நடந்ததது என்பது குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா ஊடகங்களுக்கு விளக்கமளித்துள்ளார்.
அதனை கீழுள்ள காணொளியில் முழுமையாக காணலாம்...
தொடர்புடைய செய்திகள்