பதவி விலகினார் டிலான் பெரேரா
நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேராவும் பொது நிறுவனங்கள் தொடர்பான குழுவிலிருந்து (கோப்) விலக தீர்மானித்துள்ளார்.
கோப் குழுவின் தலைவராக நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன நியமைக்கப்பட்டமையை அடுத்து அதன் உறுப்பினர்கள் பதவி விலகல் செய்து வருகின்றனர்.
நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவி விலகல்
அவர்களில், அநுர குமார திசாநாயக்க, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கீழ் நாடாளுமன்றத்திற்கு தெரிவான காமினி வலேபொட, நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன், ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான எரான் விக்கிரமரத்ன.

மற்றும் ஹேஷா விதானகே மற்றும் எஸ். எம்.மரிக்கார், நாடாளுமன்ற உறுப்பினர் சரித ஹேரத் மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர ஆகியோர் பொது நிறுவனங்கள் தொடர்பான குழு அல்லது கோப் குழுவில் இருந்து விலகிய உறுப்பினர்களில் அடங்குவர்.
நேபாளத்தில் மீண்டும் திடீர் வெள்ளப்பெருக்கு: அடித்து செல்லப்பட்ட 35 வீடுகள் மற்றும் பாலங்கள் News Lankasri
Bigg Boss 10: இரண்டாவது குறும்படத்தினை வெளியிட்ட விஜய் சேதுபதி... வாயடைத்துப்போன போட்டியாளர்கள் Manithan