குப்பி விளக்குடன் செய்தியாளர் சந்திப்பை நடத்திய எதிர்க்கட்சி உறுப்பினர்
மின்சார துண்டிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து, ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளரான நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க, குப்பி விளக்கு ஒன்றை எடுத்து வந்து கொழும்பில் இன்று செய்தியாளர் சந்திப்பை நடத்தியுள்ளார்.
எரிபொருள் இல்லாத காரணத்தினால், அடிக்கடி மின்சாரம் துண்டிக்கப்படுவதால், மக்கள் கஷ்டங்களுக்கு உள்ளாகி உள்ளமைக்கு எதிர்ப்பை காட்டும் விதமாக அத்தநாயக்க இவ்வாறு குப்பி விளக்கை எடுத்து வந்துள்ளார்.
கொழும்பு மார்க்ஸ் பெர்னாண்டோ மாவத்தையில் உள்ள எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் இந்த செய்தியாளர் சந்திப்பு நடத்தப்பட்டது.
மக்களின் இயல்பு வாழ்க்கையை முன்னெடுத்துச் செல்லும் அதே நேரத்திலேயே மின்சார நெருக்கடிக்கு தீர்வை தேட வேண்டும். மக்களின் இயல்பு வாழ்க்கையை சீர்குலைத்து மின்சார நெருக்கடிக்கு தீர்வை தேடுவது வெற்றியை கொடுக்காது.
நாட்டில் ஏற்பட்டுள்ள மின்சார நெருக்கடியை தீர்ப்பதற்கு அரசாங்கத்திடம் கூட்டு முயற்சிகள் இல்லை எனவும் அத்தநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

உக்ரைனிய வான்பரப்பை சூழ்ந்த ரஷ்ய ஏவுகணைகள்: சுட்டு வீழ்த்தப்பட்ட 600 க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் News Lankasri
இன்னும் 6 வாரங்கள்... ஐரோப்பாவின் மொத்த விமான சேவையும் ஸ்தம்பிக்கும்: வெளியான எச்சரிக்கை News Lankasri
நான் சிவனேனு தானடா இருந்தேன்: நயன்தாரா 'நார்மல் people கிடையாது' ட்ரோல் பற்றி விக்னேஷ் சிவன் விளக்கம் Cineulagam