ட்ரோன் இறக்குமதி சர்ச்சையில் சிக்கிய எம்பி.. சிஐடியின் அதிரடி நடவடிக்கை
இலங்கைக்கு உரிய அனுமதியின்றி ட்ரோன்களை இறக்குமதி செய்ததாகக் கூறப்படும் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார ஜயமஹ தொடர்பில் மேலதிக விசாரணைகளை குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (CID) முன்னெடுக்கவுள்ளது.
பொலிஸ் மா அதிபரின் உத்தரவின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், குறித்த ட்ரோன்கள் தொடர்பில் பாதுகாப்பு அமைச்சும் மதிப்பீடு ஒன்றை மேற்கொள்ளவுள்ளது.
உரிய அனுமதி..
சிங்கப்பூரிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த நளின் பண்டாரவிடமிருந்து சுங்க அதிகாரிகள் 39 ட்ரோன்கள் மற்றும் 16 ஒலிவாங்கிகளைக் கைப்பற்றியுள்ளனர்.

இவற்றை நாட்டிற்குள் இறக்குமதி செய்வதற்கு இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு (TRCSL) மற்றும் பாதுகாப்பு அமைச்சின் அனுமதி அவசியமாகும்.
இந்த நிலையில், தேவையான அனுமதிகளைப் பெற்றுக்கொண்ட பின்னர் கைப்பற்றப்பட்ட பொருட்கள் விடுவிக்கப்படும் என சுங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.