கிவுல் ஓயா திட்டம் குறித்த கருத்துக்களை மறுக்கும் அமைச்சர் சந்திரசேகர்

Parliament of Sri Lanka Northern Province of Sri Lanka Ramalingam Chandrasekar
By Thirumal Jan 26, 2026 04:59 AM GMT
Report

கிவுல் ஓயா அபிவிருத்தித் திட்டம் தொடர்பில் தமிழ்க் கட்சிகள் முன்வைத்து வரும் குற்றச்சாட்டுகளை அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் மறுத்துள்ளார்.

குறித்த திட்டம் இன அல்லது மத அடிப்படையிலான நோக்கங்களுடன் முன்னெடுக்கப்படுவதாக கூறப்படுவது முற்றிலும் தவறானதும், அரசியல் உள்நோக்கத்துடன் பரப்பப்படும் தவறான தகவல்களுமே என அவர் தெரிவித்துள்ளார்.

ராஜபக்சர்களுக்கு தொடரும் சிக்கல் : நாமல் - ஷிரந்திக்கு அழைப்பாணை

ராஜபக்சர்களுக்கு தொடரும் சிக்கல் : நாமல் - ஷிரந்திக்கு அழைப்பாணை

ஒரு சமூகமும் அநீதிக்குள்ளாக்கப்பட அனுமதிக்காது

கிவுல் ஓயா திட்டம், குறிப்பிட்ட ஒரு இனத்திற்கோ அல்லது சமூகத்திற்கோ எதிரானதாக அல்லாது, தேசிய அபிவிருத்தி, விவசாய வளர்ச்சி மற்றும் நீர்வள முகாமைத்துவத்தை இலக்காகக் கொண்டு வடிவமைக்கப்பட்ட ஒரு அரசாங்கத் திட்டம் என அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.

கிவுல் ஓயா திட்டம் குறித்த கருத்துக்களை மறுக்கும் அமைச்சர் சந்திரசேகர் | Mp Chandrashekhar Denies Reports Kivul Oya Project

இந்த ஆட்சியின்கீழ் இனவாதத்துக்கும் மதவாதத்துக்கும் எந்தவிதமான இடமும் இல்லை. அனைத்து மக்களையும் சமமாகக் கருதும் கொள்கையுடனேயே அரசாங்கம் செயல்படுகிறது என அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.

தமிழ்க் கட்சிகள் முன்வைக்கும் குற்றச்சாட்டுகளின் படி, கிவுல் ஓயா திட்டம் பாரம்பரிய தமிழ்ப் பகுதிகளில் நில அபகரிப்பையும், மக்கள் தொகை மாற்றத்தையும் நோக்கமாகக் கொண்டதாக கூறப்படுகிறது.

மேலும், உள்ளூர் மக்களின் சம்மதமின்றி திட்டம் முன்னெடுக்கப்படுவதாகவும், சுற்றுச்சூழல் மற்றும் சமூக தாக்க மதிப்பீடுகள் போதிய அளவில் மேற்கொள்ளப்படவில்லை என்றும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

இதற்கு பதிலளித்த அமைச்சர் சந்திரசேகர், தமிழ் மக்களின் நில உரிமைகளும், சமூக உரிமைகளும் முழுமையாகப் பாதுகாக்கப்படும் என்றும், எந்த ஒரு சமூகமும் அநீதிக்குள்ளாக்கப்பட அனுமதிக்கப்படமாட்டாது என்றும் உறுதியளித்தார்.

மக்களுக்கு விரோதமான எந்த திட்டமும்

சட்டத்துக்கு முரணான நில கையகப்படுத்தல்கள் எதுவும் இடம்பெறாது என்றும், திட்டம் தொடர்பான அனைத்து நடவடிக்கைகளும் உரிய சட்ட நடைமுறைகளின் கீழேயே மேற்கொள்ளப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும், கிவுல் ஓயா திட்டத்தின் மூலம் வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் விவசாய உற்பத்தி அதிகரிக்கப்படுவதோடு, ஆயிரக்கணக்கான விவசாயக் குடும்பங்களுக்கு நிலையான நீர்ப்பாசன வசதி கிடைக்கும் என அமைச்சர் குறிப்பிட்டார்.

கிவுல் ஓயா திட்டம் குறித்த கருத்துக்களை மறுக்கும் அமைச்சர் சந்திரசேகர் | Mp Chandrashekhar Denies Reports Kivul Oya Project

இந்த திட்டத்தை இன அரசியல் கண்ணோட்டத்தில் பார்க்காமல், நாட்டின் நீண்டகால அபிவிருத்தித் தேவையாகக் கருதி அணுக வேண்டும் என்றும் அவர் அழைப்பு விடுத்தார்.

மஹிந்த ராஜபக்ச ஆட்சி காலத்தில் வடக்கில் அடக்குமுறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டன. தமிழ் மக்களின் உரிமைகள் பறிக்கப்பட்டன. அந்த காலகட்டங்களில் எல்லாம் அரசாங்கத்துடன் ஒட்டுனியாக இருந்த தமிழ் கட்சிகள் இன்று தமிழ் மக்களுக்கு நன்மை நடக்கும் பொழுது பொங்கி எழுகின்றன.

தமது அரசியல் இருப்புக்கு இந்த மக்களால் தெரிவு செய்யப்பட்ட தேசிய மக்கள் சக்தியால் தான் ஆபத்து என்பதால் தான் அவர்கள் மக்கள் நலன் திட்டங்களில் கூட அரசியல் சாயம் பூசி ஒரு இழிவான அரசியலை முன்னெடுத்து வருகின்றனர்.

உள்ளுராட்சி சபை தேர்தலின் போது கூட அங்த காணி அளவீட்டில் அரசியல் சாயம் பூசி பெரும் தாக்கத்தை ஏற்படுத்தினார்கள். தன்னுடைய அரசியல் வாக்கு வேட்டைக்காக ஒரு உரிய வகையில் இடம்பெற இருந்த காணி அளவீட்டை குழப்பினார்கள். அதில் மற்றுமொரு அங்கமாகவே இந்த திட்டத்திற்கும் போர் கொடி தொடுக்கிறார்கள்.

தமக்கான அரசியல்பாதை எது என்பது தமிழ் மக்கள் இன்று நன்கு அறிந்து வைத்துள்ளனர். அதனால் தான் வரலாறு காணாத வகையில் வடகிழக்கில் கூட எங்களுக்கு ஆதரவு கிடைத்திருக்கின்றது.

இதை குழப்பவதற்கு தான் காழ்புணர்ச்சி அரசியலாக இப்படியான விசமதனமான பிரசாரங்கள் முன்னெடுக்கப்படுகின்றது. நாங்கள் மக்களுக்கு விரோதமான எந்த திட்டங்களையும் முன்னெடுக்க மாட்டோம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

உலக சந்தையில் முதல் முறை! வரலாறு காணாத விலை உயர்வை பதிவு செய்த தங்கத்தின் விலை..

உலக சந்தையில் முதல் முறை! வரலாறு காணாத விலை உயர்வை பதிவு செய்த தங்கத்தின் விலை..

12ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தரோடை, பேர்ண், Switzerland

30 Jan, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நாவற்குழி, பேர்ண், Switzerland

26 Jan, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் கிழக்கு

05 Feb, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி கல்வயல், சுண்டிக்குளி

25 Jan, 2026
மரண அறிவித்தல்

மண்கும்பான், Villejuif, France

09 Jan, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Helsingør, Denmark

24 Jan, 2026
மரண அறிவித்தல்

நவக்கிரி, யோகபுரம்

24 Jan, 2026
மரண அறிவித்தல்

யாழ் தலையாழி, Jaffna, Saint-Ouen-l'Aumône, France

19 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், திருநெல்வேலி, Zürich, Switzerland

04 Feb, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

இலுப்பைக்கடவை

25 Jan, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Drancy, France

25 Jan, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Lausanne, Switzerland

26 Jan, 2018
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம், வவுனியா

26 Jan, 2020
மரண அறிவித்தல்

நவிண்டில், Toronto, Canada

22 Jan, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கொக்குவில், வட்டக்கச்சி, Gagny, France

21 Jan, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, ஆனைக்கோட்டை, London, United Kingdom

21 Jan, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, கல்லடி, Wales, United Kingdom

23 Jan, 2026
20ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், kilinochchi

06 Feb, 2006
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, Pinner, United Kingdom

17 Jan, 2026
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

வேலணை மேற்கு, Ottawa, Canada, Markham, Canada

27 Dec, 2025
மரண அறிவித்தல்

தொல்புரம், Drancy, France

18 Jan, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் மேற்கு, கொக்குவில், London, United Kingdom

20 Jan, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Lünen, Germany

05 Jan, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Uxbridge, United Kingdom

15 Jan, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் கிழக்கு, Rorschach, Switzerland

19 Jan, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், முரசுமோட்டை, சுவிஸ், Switzerland

21 Jan, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US