தமிழ் அரசியல் தலைமைத்துவங்களின் கவனத்திற்கு : துண்டு பிரசுரங்கள் விநியோகிப்பு
அனைத்து தமிழ் அரசியல் தலைமைத்துவங்களின் கவனத்திற்கும் என்ற தலைப்பில் திருகோணமலையில் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளது.
வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவினால் இன்று (27.01.2024) குறித்த துண்டு பிரசுரங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
இலங்கைத் தமிழரசு கட்சியின் 17 ஆவது தேசிய மாநாடு திருகோணமலையில் இன்று இடம் பெற்று வருகின்ற நிலையில் ஒருங்கிணைப்பு குழுவினர் ஒவ்வொரு அரசியல்வாதிகளின் கைகளுக்கும் கிடைக்கக் கூடிய விதத்தில் இந்த துண்டு பிரசுரங்களை வழங்கி வைத்துள்ளனர்.
கட்சித் தலைமை
குறித்த துண்டுப்பிரசுரத்தில், தமிழ் தேசிய அரசியலின் வரலாற்றிலும் தமிழரசு கட்சியின் வரலாற்றிலும் முதல் தடவையாக வாக்கெடுப்பு மூலம் கட்சித் தலைமை தெரிவு நடைபெற்றுள்ளது.
இந்நிலையில் தலைமை தெரிவு செய்யப்பட்டதன் ஜனநாயக பண்பை நாம் வரவேற்பதோடு இது நிலைத்திட வேண்டும். மேலும். இலங்கை நாட்டின் உள்ளக அரசியல், பிராந்திய அரசியல் மற்றும் சர்வதேச சூழல் ஆகியன சிக்கல் நிறைந்ததாக காணப்படும் தற்போதைய சூழலில் தமிழரசு கட்சியின் தலைமைத்துவத்தை பொறுப்பேற்றிருக்கும் சிவஞானம் சிறீதரனுக்கு பாரிய கடப்பாடுகள் உள்ளன.
எனினும், இலங்கையின் வடக்கு கிழக்கு பகுதியில் பாரம்பரியமாக இருந்து வரும் தமிழ் தேசிய கொள்கையுடைய அரசியல் கட்சி ஒன்றின் தலைமைத்துவம் என்ற வகையில் அவரும் அவர் சார்ந்த கட்சியினரும் அடங்கலாக அனைத்து தமிழ் அரசியல் கட்சிகளும் உடனடியாக கவனம் செலுத்த வேண்டிய விடயங்கள் என இவற்றை வலியுறுத்துகின்றோம் எனவும் துண்டுப்பிரசுரங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |






புலம் பெயர் தமிழர்களால் சிறீலங்காவை இலங்கையாக மாற்றிக்கொள்ள முடியுமா..! 21 மணி நேரம் முன்

கொடூர வில்லனாக மாறிய குணசேகரன், தனது அம்மாவையே இப்படி செய்வாரா?... எதிர்நீச்சல் பரபரப்பு புரொமோ Cineulagam

மனைவியும் மாமியாரும் தினமும் துஷ்பிரயோகம் செய்வதாக அதிர்ச்சி புகார்! ரகசிய கமெரா மூலம் அம்பலமான கொடுமை News Lankasri

சூப்பர் சிங்கரில் ஏ.ஆர்.ரகுமான் ஹிட்ஸ் ரவுண்டில் சில போட்டியாளர்களுக்கு சர்ப்ரைஸ்.. என்ன தெரியுமா? Cineulagam

Super Singer: சூப்பர் சிங்கரில் நடுவர் கொடுத்த இன்ப அதிர்ச்சி... யாருக்கெல்லாம் வாய்ப்பு கிடைத்தது? Manithan

நிறைய பேரிடம் கடன் வாங்கி இருக்கிறார், அண்ணனுக்கு உதவ முடியாது.. திட்டவட்டமாக தெரிவித்த நடிகர் பிரபு Cineulagam
