வடக்கு கிழக்கு பகுதியில் வசிக்கும் மூவினத்தவரும் ஒற்றுமையாக இருப்போம் : விமலசாரதேரர்
வடக்கு கிழக்கில் வசிக்கும் மூவினத்தவரும் ஒற்றுமையாக இருப்போம் என வடக்கு முதன்மை சங்கநாயக்க தேரர் பூஜ்ய சியம்பலாகஸ்வெவ விமலசார தேரர் தெரிவித்த்துள்ளார்.
நாட்டு நிலமை தொடர்பாக இன்று(11) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது,
“அரசுக்கு எதிராக கொழும்பு காலி முகத்திடலில் ஒரு மாதத்திற்கும் மேலாக அகிம்சை ரீதியான போராட்டம் இடம்பெற்று வந்தது. அதனை பொருட்படுத்தாத அரசாங்க ஆதரவாளர்கள் அவர்களை தாக்கி அவர்களது போராட்டத்தை குழப்பியமையாலேயே நாட்டில் இந்த சூழ்நிலை உருவாகியுள்ளது.
இந்த சூழ்நிலையில் எங்களுக்குள் இன, மத, மொழி, பேதம், பார்த்தால் போராட்டத்தின் நோக்கமே தடம் மாறிபோய்விடும். எனவே அதற்கு இடம்கொடுக்காமல் அனைத்து இனத்தவரும் ஒற்றுமையாக ஒன்றிணைந்தாலே இந்த போராட்டம் வெற்றியடையும்.
எனவே வடக்கு, கிழக்கில் வசிக்கும் தமிழ், சிங்கள, முஸ்லீம் சகோதர்கள் இப்படியான
சூழ்நிலையில் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று பிரார்த்திக்கின்றேன்” என தெரிவித்துள்ளார்.

ஈழத்தமிழ் அரசியலின் மூத்த தலைவர் மறக்கப்பட்டாரா..! 2 மணி நேரம் முன்

சீனா, பாகிஸ்தானுக்கு கவலை அதிகரிப்பு., இந்திய விமானப்படைக்கு 3 ISTAR விமானங்கள் வாங்க ஒப்புதல் News Lankasri

ஒரே ஒரு விளம்பரம் தான்! தமிழ் சினிமாவை கலக்கி கொண்டிருக்கும் இசையமைப்பாளர்.. யார், எப்படி? Cineulagam
