சஜித்தை பிரதமராக்க நகர்வு!
அடுத்த ஆண்டில் உரிய தினத்தில் ஜனாதிபதி தேர்தல் நடத்த வேண்டுமானால் சஜித் அணியை உள்வாங்க வேண்டும். அல்லது சர்வஜன வாக்கெடுப்புக்கு செல்ல வேண்டும்.
தற்போதைய ஜனாதிபதி ரணிலின் ஆட்சியில் எதிர்கட்சி தலைவர் சஜித்தை பிரதமராக்கும் முயற்சியில் முதல் கட்ட பேச்சுவார்த்தை கொழும்பில் நடந்துள்ளது.
முஸ்லிம் தேசிய வர்த்தக கட்சி தலைவர் ஹக்கீம், மலையக கட்சி தலைவர் மனோ கணேசன் ஆகியோர் இணைந்து ரணிலுடன் பேச்சுவார்த்தை செய்ததன் பின்னர் ஜனாதிபதி ரணில் சம்மதம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன.
இதன் பின்னணி என்ன?
நாளாந்தம் மோட்டுக் கட்சியின் குடைச்சல் ஜனாதிபதி ரணிலுக்கு இருந்து வருகின்றது.
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் மொட்டுக் கட்சி சார்பாக பசில் களமிறங்க மிகப்பெரிய நகர்வு செய்து வருகின்றார்.
மறுபுறம் ஜனாதிபதி ரணில் எந்தப்பக்கம் இருந்தாலும் களமிறங்க முடிவு செய்துள்ளார். ஆனால் ஜனாதிபதி ரணிலுக்கு ஆதரவு ஒருபுறமிருக்க எந்தக் கட்சியில் இருந்து களமிறங்குவது என்பது கேள்விக்குறி.
மொட்டுக் கட்சியில் சுமார் 50 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதி ரணிலுக்கு ஆதரவாக உள்ளார்கள். இந்த ஆதரவு என்பது எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ரணிலுக்கு ஒரு ஆதரவு தளமாக அமையாது.
மொட்டுக் கட்சியை இரண்டாக உடைத்து ஒரு அணியை எடுத்தாலும் ஜனாதிபதி ரணிலுக்கு வெற்றித் தளமாக அமையாது.
முற்று முழுதாக மொட்டுக் கட்சி ஏகமனதாக ரணிலை ஜனாதிபதி வேட்பாளராக நியமித்தால் வெற்றியை நோக்கி ரணில் பயணிக்கலாம். ஆனால் மொட்டுக் கட்சி பசிலை களமிறக்கி அதன் பின்னர் அடுத்த வேட்பாளராக நாமலை களமிறக்கும் திட்டம் உள்ளது.
இந்த நிலையில் மொட்டுக் கட்சியை இரண்டாக உடைத்து ஒரு அணியை எடுத்தாலும் ஜனாதிபதி தேர்தலில் ரணிலுக்கு வெற்றியைக் கொடுக்காது.
சஜித் அணியை முற்றாக உள்வாங்கும் திட்டம்
மகிந்தவின் மொட்டுக்கட்சிக்கு சரிசமனாக சஜித் அணியை விட்டால் வேறு கட்சி இல்லை.
சஜித் அணியை ஆட்சிக்குள் உள்வாங்கி யானைக் கட்சியின் ஊடாக அல்லது சஜித்தின் அன்னம் சின்னத்தின் ஊடாக ரணில் ஜனாதிபதி தேர்தலில் களமிறங்கும் முடிவுடன்தான் வர்த்தக கட்சி ஹக்கீம் மற்றும் மலையக கட்சி மனோ ஆகியோருடன் ரணில் பேச்சுவார்த்தை செய்துள்ளார்.
அதாவது சஜித்திற்கு பிரதமர் பதவியைக் கொடுத்து சஜித்தின் அணியை முற்றாக உள்வாங்கி அந்தக் கட்சியின் பலருக்கு அமைச்சர் பதவியும் கொடுத்து ஆட்சியைக் கொண்டு செல்லுவது.
இந்த நகர்வின் மூலமாக மோட்டுக் கட்சியின் சுமார் 50 நாடாளுமன்ற உறுப்பினர்களை உள்வாங்கி சஜித் ரணில் ஆட்சியாக கொண்டு செல்லுவது. இதன் மூலமாக மொட்டுக் கட்சியை பெரும்பான்மை என்ற தளத்தை உடைத்து சஜித், ரணில் பெரும்பான்மை என்ற தளத்தை அமைப்பது என்பதுதான் ரணிலின் திட்டம்.
மோட்டுக் கட்சியின் ஆதரவு தளத்தை உடைக்க வேண்டுமானால் ரணில் அடுத்து வரும் 5 ஆண்டுகளுக்கும் ஜனாதியாக இருக்க வேண்டும் என்பது பலரின் எதிர்பார்ப்பு.
ரணிலுடன் கைகோர்க்கும் நிலை
இப்போது ரணில் கொடுக்கும் பிரதமர் பதவியை பெற்றுக் கொண்டு சஜித், ரணிலுடன் பயணிப்பது நல்லது.காரணம் சஜித் அணியில் இருந்து பலர் ரணிலுடன் கைகோர்க்கும் நிலை பிரகாசமாக உள்ளது.
பிரதமர் பதவி வேண்டாம் ரணிலுடன் சேரமாட்டேன் என்று சஜித் அடம் பிடித்தால் அதுவொரு மிகப்பெரிய முட்டாள் தனம் என்றே சொல்லலாம். சஜித் இன்னும் பப்பியாகவே உள்ளார்.
பப்பியில் இருந்து நீங்கி ரணிலுடன் இணைவது சஜித்தின் எதிர்கால அரசியலுக்கு நல்லது. சஜித் இல்லை என்றாலும் ரணில் சஜித் அணியில் இருந்து ஒரு அணியையும் மொட்டுக் கட்சியில் இருந்து ஒரு அணியையும் பிரித்து எடுத்து ரணில் பயணிக்கவுள்ளார். ஆக ஜனாதிபதி தேர்தலா அல்லது சர்வஜன வாக்கெடுப்பா.

அப்ப புரியல, இப்ப புரியுது! 3 ஆண்டுகளுக்கு முன் வசியின் DJ பார்ட்டியில் பிரியங்கா தேஷ்பாண்டே Manithan

வீட்டை சுத்தம் செய்யும் போது கிடைத்த தந்தையின் பழைய பாஸ்புக்.., ஒரே இரவில் மகன் கோடீஸ்வரன் News Lankasri

ஆனந்தி கர்ப்பமாக இருக்கும் விஷயம், பளார் விட்ட நபர், இவர்களுக்கும் உண்மை தெரிந்ததா? சிங்கப்பெண்ணே புரொமோ Cineulagam
