சுனாமி ஆழிப்பேரலையில் சிக்கி உயிர்நீத்தவர்களை நினைவுகூர்ந்த மலையக மக்கள்
சுனாமி ஆழிப்பேரலை இடம்பெற்று இன்றுடன் 16 ஆண்டுகள் நிறைவடைவதை நினைவுகூரும் வகையில் உயிரிழந்த உறவுகளுக்கு மலையக மக்கள் தமது அஞ்சலியை செலுத்தியுள்ளனர்.
கடந்த 2004ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 26ஆம் திகதி இலங்கையின் வரலாற்றில் மிகவும் துயரகரமான நிகழ்வாக ஆழிப்பேரலை அனர்த்தம் இடம்பெற்றது.
இந்த அனர்த்தத்தில் உயிர்நீத்த இலங்கை உறவுகளுக்கு தமது அஞ்சலியை மலையக மக்கள் செலுத்தியுள்ளனர்.
ஹட்டன் பொலிஸார், நகர வர்த்தகர்கள் மற்றும் ஹட்டன் - டிக்கோயா நகரசபை இணை ஏற்பாட்டில் ஹட்டன் புத்தர் சிலைக்கு முன்னால் இந்த அஞ்சலி நிகழ்வு இடம்பெற்றுள்ளது.
இதில் ஹட்டன் நகரில் உள்ள வங்கி ஊழியர்கள், நகர வர்த்தகர்கள், சாரதிகள் சங்க உறுப்பினர்கள், ஆசிரியர்கள், பொது மக்கள் என அனைவரும் கலந்து கொண்டிருந்தனர்.



