'மாண்பு மிகு மலையகம் நடை பயணம்' மதவாச்சியில் நிறைவு
இலங்கை வாழ் மலையக மக்கள் இலங்கைக்கு வருகை தந்து 200 வருடங்கள் பூர்த்தியாகியுள்ள நிலையில், மலையக மக்களின் உரிமை மற்றும் அவர்களின் மூதாதையர் விட்டுச் சென்ற சுவடுகள் ஊடாக பயணிப்பதை நோக்காகக் கொண்டு ஆரம்பிக்கப்பட்ட மாண்பு மிகு மலையகம்-200 நடைபவணி இன்றைய தினம் வெள்ளிக்கிழமை (04.08.2023) மதவாச்சியை சென்றடைந்தது.
கடந்த 31ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணியளவில் பேசாலையில் ஆரம்பமான நடைபவனி மன்னார், கிளிநொச்சி, வவுனியா ஊடாக மதவாச்சியை சென்றடைந்துள்ளது.
பொருளாதார விடயங்கள் சார்ந்த கலந்துரையாடல்
ஐந்தாவது நாளாக, வவுனியாவில் இருந்து ஆரம்பித்த நடைபயணம் மதவாச்சி - பிரதேச செயலகத்திற்கு அருகில் நிறைவுபெற்றது. இன்றைய நடைபயணத்தில் நேற்று மடுவில் இருந்து செட்டிகுளம் ஊடாக நடைபயணத்தை ஆரம்பித்த ஆதரவுக் குழுவினரும் மதவாச்சியில் ஒன்றிணைந்துள்ளனர்.
இந்த நடைபயணத்தில் 300 பேர் பங்கேற்றதாக ஏற்பாட்டுக்குழுவினர் தெரிவிக்கின்றனர். இன்று மாலை மலையக மக்களின் அரசியல், சமூக, பொருளாதார விடயங்கள் சார்ந்த கலந்துரையாடல் ஒன்றும் இடம்பெறவுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |



