வனஜீவராசிகள் திணைக்கள வலயப்பொறுப்பதிகாரியை தீண்டிய மலைப்பாம்பு (Photos)
புத்தளம் பகுதியில் நேற்றிரவு தோட்டமொன்றிற்குள் உட்புகுந்த மலைப்பாம்பை அவதானித்த அப்பகுதி மக்கள் உயிருடன் பிடித்து வனஜீவராசிகள் கட்டுப்பாட்டுப்பிரிவு அலுவலகத்தில் ஒப்படைத்துள்ளனர்.
இந்நிலையில், ஒப்படைக்கப்பட்ட மலைப்பாம்பை இன்று சரணாலயத்தில் விடுவிப்பதற்காக கடும் பிரயத்தனத்திற்கு மத்தியில் பிடிப்பதற்கு முற்பட்ட வேளை புத்தளம் வனஜீவராசிகள் திணைக்கள வலயப்பொறுப்பதிகாரியை மலைப்பாம்பு தீண்டியுள்ளது.
இதன்போது கையில் காயம் ஏற்பட்டுள்ளதாக வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில்,மலைப்பாம்பை தப்போவ சரணாலயத்தில் விடுவித்ததாக வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
குறித்த மலைப்பாம்பு சுமார் 9 அடி நீளமுடையதாக காணப்படுவதாக வனஜீவராசிகள் அதிகாரிகள் மேலும் தெரிவித்துள்ளனர்.
பாம்புகளை பிடிப்பதற்கான உரிய உபகரணங்கள் தம்மிடம் இல்லாமையினாலேயே
மலைப்பாம்பு தீண்டுதலுக்கு உள்ளாகியதாக புத்தளம் வனஜீவராசிகள் கட்டுப்பாட்டுப்பிரிவினர் தெரிவித்துள்ளனர்.




28 ஆண்டுகள், 29 நாடுகள், 50,000 கி.மீ நடைபயணம்- பிரித்தானியாவிற்கு திரும்பிய சாகச வீரர் News Lankasri
காலையில் வெறும் வயிற்றில் 2 பேரீச்சம்பழங்கள் - உடலில் நடக்கும் மாற்றங்கள் என்னென்ன தெரியுமா? Manithan
Flydubai தாக்குதல் சம்பவம்... விமானி ஸ்மித் மச்சாரை காப்பாற்றியதை வெளிப்படுத்திய பல் மருத்துவர் News Lankasri