கொழும்பின் புறநகர் பகுதியில் வீடொன்றுக்குள் புகுந்து கொள்ளையன் அட்டகாசம்
கொழும்பு புறநகர் பகுதியில் வீடொன்றில் கொள்ளையில் ஈடுபட்ட நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 14ஆம் திகதி கல்கிஸ்ஸ பகுதியில் உள்ள வீடொன்றை உடைத்து சொத்துக்களை கொள்ளையிட்டுச் சென்றுள்ளார்.
இது தொடர்பில் தேடப்பட்டு வந்த சந்தேக நபர் நேற்றையதினம் இரத்மலானையில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
பொருட்கள் கொள்ளை
கைது செய்யப்பட்டவர் இரத்மலானை பிரதேசத்தைச் சேர்ந்த 32 வயதுடையவராவார்.

பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் சந்தேக நபர், இரத்மலானை பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபரிடமிருந்து போதைப்பொருள் உட்பட பல்வேறு பொருட்களை பொலிஸார் பறிமுதல் செய்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கல்கிஸ்ஸ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
ரஜினி, கமல் படத்திலிருந்து சுந்தர் சி திடீர் விலகல்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்.. என்ன ஆச்சு Cineulagam
டிசம்பர் 6 இந்தியாவின் 4 நகரங்களில் குண்டு வெடிப்புக்கு திட்டம் - விசாரணையில் அதிர்ச்சி தகவல் News Lankasri