மொட்டுக்கட்சி மக்களின் ஆதரவை இழந்து விட்டது-வீரவங்ச
மக்கள் ஆணையில்லாத தற்போதைய அரசாங்கம் தேர்தலுக்கு அஞ்சுவதாகவும் நாடகம் ஒன்றை நடத்தி, தேர்தலை நடத்த முடியாது என்ற மனநிலையை மக்கள் மத்தியில் உருவாக்க முயற்சித்து வருகின்றனர் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச தெரிவித்துள்ளார்.
சிங்கள பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனை கூறியுள்ளார்.
மக்கள் தாமரை மொட்டை பூஜைக்கும் வைப்பதில்லை
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு மக்கள் மத்தியில் ஆதரவில்லை. தமக்கு மக்கள் மத்தியில் இன்னும் ஆதரவு இருக்கின்றது என்று பொதுஜன பெரமுனவினர் நினைக்கின்றனர்.
பொதுஜன பெரமுனவின் வாக்கு வங்கி கரைந்து போய்விட்டது. அந்த கட்சி மக்களின் ஆதரவை இழந்து விட்டது. உரிய தினத்தில் உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்தினால், எந்த அளவுக்கு அந்த கட்சி மக்கள் மத்தியில் ஆதரவை இழந்துள்ளது என்பதை அறிந்துக்கொள்ள முடியும்.
தற்போது பொதுஜன பெரமுனவை பற்றி பேசி பயனில்லை. மக்கள் தற்போது பௌத்த விகாரைகளில் தாமரை மலர்களை பூஜைக்கும் வைப்பதில்லை எனவும் விமல் வீரவங்ச கூறியுள்ளார்.
அரசாங்கம் தேர்தலை ஒத்திவைக்கலாம்
அதேவேளை உள்ளூராட்சி சபைத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்திக்கும், தேசிய மக்கள் சக்திக்கும் தமது கூட்டணியால், கடும் போட்டியை உருவாக்க முடியும். எனினும் தேர்தல் நடத்தப்படுமா என்ற சந்தேகமும் இருக்கின்றது.
அரசாங்க தரப்பு தகவல்களுக்கு அமைய இறுதி நேரத்தில் தேர்தல் ஒத்திவைக்கப்படலாம். இந்த தேர்தல் தொடர்பில் மக்களுக்கு அக்கறை இருப்பதை காண முடியவில்லை. இதனை அரசாங்கம் தனக்கு சாதகமாக பயன்படுத்த வாய்ப்புள்ளது எனவும் வீரவங்ச மேலும் தெரிவித்துள்ளது.

உள்ளூராட்சி தேர்தலில் விழிப்படைந்த சிறுபான்மை சமூகம் 7 நிமிடங்கள் முன்

இந்தியாவால் கொல்லப்பட்ட பயங்கரவாதிகள் இறுதிச்சடங்கில் கவனம் ஈர்த்த நபர்... யாரிந்த அப்துல் ரவூஃப் News Lankasri
