நல்லாட்சியை விமர்சிக்க மொட்டுக்கு அருகதை இல்லை! - மைத்திரி பதிலடி
"எனது தலைமையில் நல்லாட்சி திறம்பட நடைபெற்றது. இதை விமர்சிப்பதற்கு ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியினருக்கு எந்த அருகதையும் கிடையாது என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
தேசிய அரசமைக்கும் யோசனைக்கு எதிராகவும் அவர் கருத்து வெளியிட்டார். ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கொழும்பு மாவட்ட மாநாடு இன்று கொழும்பில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய மைத்திரிபால சிறிசேன, ”அமைச்சர்களின் எண்ணிக்கையைக் குறைத்து, அரச செலவீனங்களைக் கட்டுப்படுத்த வேண்டிய சூழ்நிலையில், தேசிய அரசமைக்கும் யோசனை ஏற்புடையது அல்ல. இன்று அமைச்சுகளுக்குள் மோதல் இடம்பெறுகின்றது.
எமக்கு தேசிய வேலைத்திட்டமொன்றே அவசியம். அதனை முன்வைப்போம்.
நல்லாட்சி மீது முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளை அடியோடு நிராகரிக்கின்றோம் என்றார்.
ரூ. 50 கோடிக்கும் மேல் வசூல் செய்த கட்டா குஸ்தி 2 திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் எப்போது தெரியுமா.. இதோ Cineulagam
வாய்ப்பு கொடுக்க படுக்கைக்கு அழைத்த நபர், அய்யனார் துணை நடிகை வேதனை... சொன்ன திடுக்கிடும் தகவல் Cineulagam
ஹார்முஸ் முடக்கத்தால் தத்தளிக்கும் ஆசிய நாடுகள்... சத்தமின்றி கனடா பக்கம் திரும்பிய ஜப்பான் News Lankasri